கோட்ஸே ஒரு இந்து தீவிரவாதி என கமல் சொன்னதால் பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் பறக்கிறது. ஆனால் எந்த பிரச்சனை வந்தாலும் நான் சொன்னதை திரும்ப பெறமாட்டேன் என சொல்லிவிட்டார் கமலஹாசன். திருப்பரங்குன்ற இடைத்தேர்தலில் ம.நீ.மை சார்பாக போட்டியிடும் சக்திவேலுக்கு ஆதரவாக பிரசாரத்தில் பேசிய கமல்ஹாசன்,“ அநீதி எங்கு நடந்தாலும் அதை தட்டி கேட்பேன். 

சுகந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் சொன்னது சரித்திர உண்மை. கோட்ஸே குறித்த எந்த மாற்றமும் இல்லை. எனது பேச்சை யாரும் முழுமையாக புரிது கொள்ளவில்லை. அதனால்தான் என்னிடம் சண்டைக்கு வருகிறார்கள். நான் யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை. யாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசவில்லை ஆனால் சரித்திர உண்மை பேசினால் புண்ணாகும் என்றால் அதை நாம் ஆற்றதான் வேண்டும். 

ஆரம்பத்தில் உண்மை கொஞ்சம் கசக்கதான் செய்யும் பின்பு அந்த கசப்பானது மருந்தாக மாறும். மதச் செருக்கு சாதி செருக்கு எல்லாம் நிற்காது. இதனால் இந்த அரசு வீழும் நாம் சேர்ந்து வீழ்த்துவோம்” என முடித்தார் பிரசாரத்தை. கமல் தான் கூறி கருத்தை பின்வாங்கததால் கமல் திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரசாரம் பாதியிலே ரத்து செய்யப்பட்டது. சில அமைப்பினர் கருப்பு கொடியுடன் கமலுக்கு எதிராக போராட்டத்திலும் ஈடுப்பட்டனர்.