Asianet News TamilAsianet News Tamil

கமல் VS ரஜினி மருமகன்.. கோவை தொகுதி யாருக்கு? திமுக போடும் மாஸ்டர் பிளான்.. பரபரக்கும் தேர்தல் களம்..

கோவை நாடாளுமன்ற தொகுதியில் ரஜினியின் மருமகன் விசாகனை களமிறக்க வேண்டும் என்று திமுகவின் கட்சி தலைமைக்கு ஆலோசனை வழங்கி வருவதாக தகவல் வெளியாகி உளது.

Kamalhaasan VS Rajini son-in-law Vishagan.. who is Coimbatore dmk candidate in 2024 loksabha election Rya
Author
First Published Feb 24, 2024, 1:45 PM IST

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதான கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணியை தொடங்கிவிட்ட நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இந்த தேர்தலில் திமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.

அதன்படி கடந்த மக்களவை தேர்தல் கமல் தனித்து போட்டியிட்ட கோவை தொகுதியில் இந்த முறை கமல் திமுக கூட்டணியில் போட்டியிட உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் கோவையை ஏன் கூட்டணிக்கு கொடுக்க வேண்டும் என்றும், திமுகவே போட்டியிட வேண்டும் என்று கட்சி தலைமைக்கு திமுக உடன்பிறப்புகள் ஆலோசனை கொடுத்து வருகின்றனர். 

சினிமா மாஸ் காட்சி போல ஒடுக்குமுறையை திருமாவளவன் எதிர்க்கிறார்.. பா.ரஞ்சித் புகழாரம்..!

ராமநாதபுரத்தை சேர்ந்த உடன்பிறப்பு ஒருவர் இதுகுறித்து பேசிய போது “ பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகள் கோவை நாடாளுமன்ற தொகுதியில் உள்ளன. இதில் கோவை தெற்கு தவிர மீதமுள்ள 5 தொகுதிகளும் அதிமுக வசம் உள்ளது. மறுபுறம் உட்கட்சி பூசல், கோஷ்டி அரசியல் உள்ளிட்ட பல காரணங்களால் திமுக பலவீனமாக உள்ளது. 

ஜெயலலிதா இருந்த போதே கொங்கு சமுதாயத்தினர் மட்டுமின்றி, நாயக்கர், செட்டியார் போன்ற சமூகத்தினருக்கும் வாய்ப்பு வழங்கி கோவை மாவட்டத்தை அதிமுகவின் கோட்டையாக மாற்றினார். ஆனால் திமுகவோ குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி அவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வருவதால் மற்ற சமுதாயத்தை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திமுக மீது அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். 2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகளே இதற்கு சாட்சி. எனவே கோவை நாடாளுமன்ற தொகுதியில் இந்த முறை திமுக போட்டியிட்டு, மாறு சமுதாயத்தினரை அரவணைத்து வாய்ப்பு வழங்கினால் திமுக வெற்றி பெறுவதுடன், அதிமுகவின் ஆதிக்கத்தையும் முடிவுக்கு கொண்டு வர முடியும்” என்று தெரிவித்தார். 

சூலூரை சேர்ந்த உடன்பிறப்பு ஒருவர் பேசிய போது “ கோவை மாவட்டத்தில் திமுக அசைக்க முடியாத சக்தியாக இருந்தது என்றால் அது சூலாரில் தான். சூலூரில் திராவிட பாரம்பரியத்தை வளர்த்தெடுத்த சூலூர் சுப்பிரமணியனின் அரசியல் வாரிசாக இருந்தவர் திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ பொன்முடி. இவர் உயிரோடு இருந்தவரை சூலூர் திமுக உயிர்ப்புடன் இருந்தது. ஆனால் அவரின் மறைவுக்கு பின், பொன்முடியின் குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் இருந்து விலகியது. இது திமுகவிற்கு பலவீனமாக மாறியது.

நாடாளுமன்ற தேர்தல்.. சீமானின் மனைவி கயல்விழிக்கு நாதகவில் முக்கிய பதவி.!

பொன்முடியின் தம்பியான வணங்காமுடியின் மகன் தான் விசாகன். இவர் தான் நடிகர் ரஜினிகாந்தின் 2வது மகளான சௌந்தர்யாவை திருமணம் செய்துள்ளார். ரஜினி தன் மகளை பார்க்க அடிக்கடி சூலூர் செல்வது வழக்கம். திமுக பாரம்பரியத்துடன், ரஜினியின் மருமகன் என்ற பெருமையும் கொண்டுள்ள விசாகனை கோவை நாடாளுமன்ற தொகுதியில் களமிற்க்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். 

அவர் வெற்றி பெற்றால் வெற்றி பெறுவது எளிது. மேலும் தேவர், நாயக்கர், செட்டியார் அருந்ததியினர் உள்ளிட்ட மற்ற சமுதாயத்தினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்து. நடிகர் ரஜினியின் ரசிகர்களும் தேர்தல் பணியாற்றுவார்கள். எனவே திமுக தலைமை கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக விசாகனை நிறுத்த வேண்டும் என்று கடிதமாகவும், செய்தியாகவும் தலைமைக்கு தெரிவித்துள்ளோம்” என்று தெரிவித்தார். திமுக தலைமை இந்த தேர்தலில் கமலுடன் கூட்டணி அமைத்து கோவை தொகுதியை கமலுக்கு கொடுக்குமா அல்லது ரஜினி மருமகனை களமிறக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios