தாமதமாக வந்து சொதப்பிய வேட்பாளர் மனு நிராகரிப்பு... முதல் கோணலில் கமல் கட்சி..!

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கால தாமதமாகவும், உரிய ஆவணங்கள் இன்றி வந்ததாக கூறி அவரது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியர் வாங்க மறுத்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

kamalhaasan party candidate petition rejected

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கால தாமதமாகவும், உரிய ஆவணங்கள் இன்றி வந்ததாக கூறி அவரது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியர் வாங்க மறுத்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 19-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியது. kamalhaasan party candidate petition rejected

மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தேர்தல் இரண்டிலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியலை 2 கட்டமாக வெளியிட்டார். இதையடுத்து மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் வரிசையாக தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வந்தனர். இந்நிலையில் இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவு அடைந்தது. இதையடுத்து டோக்கன் வழங்கப்பட்ட நபர்களுக்கு மட்டும் வேட்புமனு தாக்கல் செய்ய தற்போது அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. kamalhaasan party candidate petition rejected

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் செந்தில்குமார் என்பவர் வேட்பாளரை அறிவிக்கப்பட்டிருந்தார். 3 மணிக்கு வேட்பு மனுதாக்கல் முடிந்த நிலையில் 3.20 மணிக்கு தாமதமாக வந்ததாலும், முறையான ஆவணங்கள் இல்லாததால் அவரது மனு நிராகரிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தாமதமாக வந்த காரணத்தால் இவரை போலீசார் அலுவலகத்திற்கு உள்ளே அனுமதிக்கவில்லை.

 kamalhaasan party candidate petition rejected

இதனால் அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளுடன் பெரம்பலூர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் செந்தில்குமார் வாக்குவாதம் செய்தார். இதனால் ஙே்கு பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூரில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பச்சமுத்து என்கிற பாரிவேந்தர், அ.தி.மு.க. வேட்பாளரான முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி, அமமுக சார்பில் ராஜசேகரன் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios