Asianet News TamilAsianet News Tamil

சுபஸ்ரீ பெற்றோருக்கு நடிகர் கமல் ஆறுதல்... பேனர் கலாச்சாரத்தை மக்கள் ஒழிப்பார்கள்... கமல் அதிரடி பேட்டி!

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம், மக்கள் மத்தியில் கடும் கோப அலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் இறந்த சுபஸ்ரீயின் வீட்டுக்கு சென்று அவருடைய பெற்றோருக்கு பொதுமக்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் ஆறுதல் தெரிவித்துவருகிறார்கள். 

Kamal went to subasri home in chennai
Author
Chennai, First Published Sep 15, 2019, 10:45 PM IST

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததால், லாரி மோதி பலியான சுபஸ்ரீயின் வீட்டுக்கு நேரில் சென்று அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்  மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமல்ஹாசன்.Kamal went to subasri home in chennai
கடந்த செப்டம்பர் 12 அலுவலகப் பணியை முடித்து விட்டு குரோம்பேட்டையில் உள்ள வீட்டுக்கு பல்லாவரம் - துரைபாக்கம் ரேடியல் ரோட்டில் சுபஸ்ரீ சென்றார். மதியம் 2.50 மணி அளவில் பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையைத் தாண்டி வந்தபோது, சென்டர் மீடியனில் கட்டப்பட்டிருந்த பேனர் சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த லாரி மேலே ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சுபஸ்ரீ பலியானார். Kamal went to subasri home in chennai
 நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம், மக்கள் மத்தியில் கடும் கோப அலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் இறந்த சுபஸ்ரீயின் வீட்டுக்கு சென்று அவருடைய பெற்றோருக்கு பொதுமக்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் ஆறுதல் தெரிவித்துவருகிறார்கள். அந்த வகையில், சுபஸ்ரீ குடும்பத்தினரைச் சந்தித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஆறுதல் கூறினார்.Kamal went to subasri home in chennai
பின்னர் செய்தியாளர்களிடம் கமல் பேசினார். “பேனர் வைத்த குற்றவாளி அதிக நாட்கள் நிச்சயமாக ஓடி ஒளிய முடியாது. இந்த பேனர் கலாச்சாரத்தை முதலில் ஒழிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், மக்களே அதை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அதற்கு மக்களுடன் சேர்ந்து மக்கள் நீதி மய்யமும் துணை நிற்கும்” என்று கமல் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios