அதேவேளையில் ‘கமல், பி.ஜே.பி.யின் ‘B டீம்’. அவர்கள் எல்லாம் சேர்ந்து ஓட்டுக்காக நடிக்கிறார்கள்! என்றெல்லாம் விமர்சனங்கள் இருக்கின்றன. இருந்தாலும் வேறு வேறு திசைகளில் இருந்து கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கான பின்புலங்கள் ஆராய்ந்து அலசப்படுகின்றன. அதில் ஒன்றுதான் ‘பிக்பாஸ்’ பின்னணி. 

இதை உடைக்கும் அரசியல் விமர்சகர்கள் “ பிக்பாஸ் சீசன் -1 கமலால் வென்றது. ஆனால் சீசன் 2 ஃபெயிலியரானது. எனவே சீசன் 3 கிடையாது! என்று பேசப்பட்ட நிலையில் மீண்டும் கமலை வைத்து துவக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் கமலின் சம்பளம் நூறு கோடி! என்று மறுக்கப்படாத தகவல்கள் வலம் வருகின்றன. 

கமல் கேட்ட நூறு சி சம்பளத்தை தர ஒப்புக் கொண்ட சேனல் தரப்பு, ‘என்ன செய்தாவது ஷோவை ஹிட் செய்யுங்கள்.’ என்று ஒன்லைன் கோரிக்கை வைத்ததாம். அதன் விளைவாகவே, தன் பிஸ்னஸோடு சேர்த்து அரசியலுக்கும் பயன்படும் வகையில் கோட்சேவை வம்புக்கு இழுத்தார் கமல். கோட்சே பரபரப்பை இன்னும் குறையாமல், அது பற்றித் திரும்பத் திரும்ப பேசி பாதுகாத்து வருகிறார். இதை பிக்பாஸ் சீசன் -3 துவங்கும் வரையில் கொண்டு செல்வார் போலும். 

இந்துக்களை  சீண்டினால் லேசாக முறைத்துவிட்டு, அமைதியாகிடுவார்கள் என்று கமல்ஹாசன் தப்புக் கணக்கு போட்டுவிட்டார். இந்த முறை மக்கள் பொங்கி எழுந்துவிட்டனர். அது பூமராங்காக மாறி, அவரையே போட்டுத் தாக்கிவிட்டது. 

அரவக்குறிச்சியில் மட்டுமல்ல, மீதி மூன்று தொகுதிகளிலுமே இந்துக்களின் ஓட்டுக்கள் கமலுக்கு விழுந்திருக்காது. 
கமலுக்கு ஒரேயொரு கோரிக்கை, உங்களின் அரசியலுக்காகவோ அல்லது டி.வி. ஷோவுக்காகவோ அல்லது சினிமாவுக்காகவோ...தயவுசெய்து மக்களின் உணர்வுகளை இனி சீண்டாதீர்கள்.” என்று முடிக்கின்றனர்.