நடிகர்கள் தலைப்பு செய்தியாகலாம் ஆனால் தலைவர்கள் ஆக முடியாது என்ற தமிழிசையின் கருத்துக்கு உங்களுக்கெல்லாம் பதில் சொல்லனும்மா என்ன எனவும் அவர்கள் பேசிக்கொண்டே இருக்கட்டும் நாம் செயல்பாடுகளில் இறங்கலாம் எனவும் நடிகர் கமல் தெரிவித்துள்ளார். 

இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை, சினிமா வாய்ப்புகள் குறைந்து விட்டதால் நடிகர் கமல்ஹாசன் தற்போது அரசியலுக்கு வருவதாகவும் கமல் வந்துதான் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நிலை இல்லை எனவும் தெரிவித்தார். 

யார்வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ஆனால் தலைப்பு செய்தியில் வரலாம் தலைவர்களாக வர முடியாது எனவும் விமர்சித்தார். 

இந்நிலையில், நடிகர் கமலஹாசன் இன்று மதுரை ஒத்தக்கடையில் தமது கட்சியின் கொடியை ஏற்றி வைத்து மக்கள் நீதி இயக்கம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார். 

பின்னர் தனது அரசியல் கொள்கைகளை அறிவித்தார். அதில், தரமான கல்வியை தருவதே எனது முதல் கொள்கை எனவும் என்னுடன் முடியும்கட்சி அல்ல எனவும் நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

மேலும் தமிழிசை கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இதுக்கெல்லாம் பதில் சொல்லனும்மா என்ன என மக்களை பார்த்து கேள்வி எழுப்பினார். அவர்கள் பேசிக்கொண்டே இருக்கட்டும், நாம் செயல்களில் காட்டுவோம் என தெரிவித்தார்.