Asianet News TamilAsianet News Tamil

போக்குவரத்து ஊழியர்களின் பிரச்னையை தீருங்க.. அதுவே சிறந்த பொங்கல் பரிசு - முதல்வருக்கு கமல் வலியுறுத்தல்

kamal requested chief minister to speak with transport associations
kamal requested chief minister to speak with transport associations
Author
First Published Jan 5, 2018, 11:14 AM IST


தமிழக மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில்கொண்டு முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி வரும் 1.43 லட்சம் தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே போடப்பட்ட 12-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி முடிவடைந்தது. புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் உடன்பாடு எட்டப்படாமல் இருந்தது.

13வது ஊதிய ஒப்பந்தத்தில் 2.57% ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன. போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கி பேச்சுவார்த்தை நடந்தது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்துத்துறை உயரதிகாரிகள் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. ஆனால், உடன்பாடு எட்டப்படவில்லை. 

2.57 சதவீத ஊதிய உயர்வு என்றால் 10 ஆண்டுக்கு ஒருமுறையும், 2.44 சதவீத உயர்வு என்றால் 4 ஆண்டுக்கு ஒரு முறையும் 2.37 சதவீத உயர்வு என்றால் 3 ஆண்டுக்கு ஒருமுறையும் ஊதிய உயர்வு வழங்கப்படும் என அரசு தெரிவித்தது. தொழிற்சங்க நிர்வாகிகள் இதை ஏற்க மறுத்தனர். பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோதே போக்குவரத்து ஊழியர்கள் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இந்நிலையில், இன்று காலையும் வேலைநிறுத்தம் தொடர்கிறது. சென்னையில் 40% பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. இதனால் மாணவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லமுடியாமலும் பயணிகள் வேலைக்கு செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.

தற்காலிக ஊழியர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர அவர்களுடன் முதல்வர் பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கமல் கோரிக்கை விடுத்துள்ளார்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="ta" dir="ltr">தமிழக முதலமைச்சர், மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில் கொண்டு, தயவாய் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.  பொங்கலுக்கு அதுவே அரசுதரும்  விலைமதிப்பிலா பரிசாகும்.</p>&mdash; Kamal Haasan (@ikamalhaasan) <a href="https://twitter.com/ikamalhaasan/status/949150679536304128?ref_src=twsrc%5Etfw">January 5, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

இதுதொடர்பாக, தமிழக முதலமைச்சர், மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில் கொண்டு, தயவாய் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.  பொங்கலுக்கு அதுவே அரசுதரும் விலைமதிப்பிலா பரிசாகும் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios