Asianet News TamilAsianet News Tamil

#BREAKING நீட்-க்கு பதிலாக ‘சீட்’ தேர்வு... ம.நீ.ம தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கமல்...!

இன்று கோவையில் மக்கள் நீதி மய்யத்தில் தேர்தல் அறிக்கையை கமல் ஹாசன் வெளியிட்டுள்ளார். 

Kamal Makkal Needhi maiam Manifesto released
Author
Coimbatore, First Published Mar 19, 2021, 10:49 AM IST

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தலைமையிலான கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி, எஸ்.டி.பி.ஐ.  ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன.  இந்த கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 154 தொகுதிகளும், சமத்துவ மக்கள் கட்சிக்கும் இந்திய ஜனநாயகக் கட்சிக்கும் தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

Kamal Makkal Needhi maiam Manifesto released

இந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள கமல் ஹாசன், தற்போது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் இன்று கோவையில் மக்கள் நீதி மய்யத்தில் தேர்தல் அறிக்கையை கமல் ஹாசன் வெளியிட்டார். 

அதில் உள்ள முக்கிய அம்சங்களை தற்போது பார்க்கலாம்... 

மருத்துவ படிப்புகளுக்கு தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இருந்து SEET தேர்வு நடத்தப்படும் 

மேடு, பள்ளம் இல்லாத மேம்படுத்தப்பட்ட சமூக நிதி வழங்கப்படும் 

அனைவரையும் உள்ளடக்கிய, வேறுபாடுகளை களைந்த அரசியல் நீதி வழங்கப்படும் 

உயர்கல்வி - உலக தரம் வாய்ந்த ஆராய்ச்சி கல்வியாக மாற்றம், உலகத்தோடு போட்டி போடும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு முக்கியத்துவம்

அனைவருக்கும் உலக தரம் வாய்ந்தமருத்துவம், மருத்துவ வசதி, தரமான அரசு மருத்துவ கல்வி, உயர்கல்வியில் சமூக நீதி நிலைநாட்டப்படும்

UNO - Unorganised to Organised அனைத்து தொழிலாளர் நலவாரியங்கள், நல மேம்பாட்டு வாரியங்களாக

மாற்றியமைத்து அவர்களுக்கு சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாடு உறுதிசெய்யப்படும்

சுற்றுப்புற சூழலுக்கேற்ற தொழில் துறை மேம்பாடு, மாசுபடுத்தும் 155 ஆலைகள் முற்றிலும் மாசில்லா ஆலைகளாக மாற்ற உறுதிசெய்யப்படும்

நட்டத்தில் இயங்கும் அனைத்து அரசு நிறுவனங்களும் லாபத்தில் இயங்க அறிவார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்

கிராமப்புற நகர்புற கட்டமைப்பு, தொழிற்சாலை எரிசக்தி, விவசாய சுற்று சூழல் மற்றும் நீர்நிலை கட்டமைப்பு உலக தரத்தில் மேம்பாடு 

தமிழ் மொழி, கல்வி மொழி, ஆட்சி மொழி, ஆராய்ச்சி மொழி, ஒரு வருடத்தில் ஆங்கில மொழி புலமை,

மற்ற மொழி பயில, தேர்வு எழுத வசதிவாய்ப்பு.

ஜாதி, மத வேறுபாடில்லா மக்களாட்சி அமைப்போம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, மதத்தின் பெயரால் குடியுரிமை மறுப்பை முற்றிலும் எதிர்ப்போம். 

ஈழத்தமிழ் அகதிகளாக வந்தோருக்கு குடியுரிமை வலியுருத்துவோம்.

மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் அரசியல் மற்றும் சட்ட வழி முறைகளை பின்பற்றி அதை நனவாக்கும் கூட்டணி அரசை மத்தியில் உருவாக்குவோம். தமிழ்நாட்டை வளர்ந்த நாடுகளுக்கு இணையான நாடாக்குவோம்.
                          
ஊழலற்ற, நேர்மையான, விரைந்து செயல்படும் மக்கள் நலம் காக்கும் - மக்களாட்சி

 விவசாயம், தொழில், உற்பத்தி மற்றும் சேவைத் துறை வளர்ச்சியை உயர்த்தி தமிழகத்தின் ஒட்டு மொத்த

பொருளாதாரத்தை அடுத்த 10 ஆண்டில் 15-20% வளர்ச்சியை உறுதி செய்து $1 ட்ரில்லியன் (ரு 60-70 லட்சம் கோடியாக) ஆக உயர்த்துவோம். தனி நபர் வருமானத்தை 7-10 லட்சமாக உயர்த்தி மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்

1-2 கோடிப் பேருக்கு மதிப்பு கட்டப்பட்ட வேலைவாய்ப்பை உறுதி செய்து, தனி நபர் வருமானத்தை 7-10 லட்சமாக

உயர்த்தி மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்

 நதி நீர் இணைப்பு, அதி திறன் நீர் வழிச்சாலை, நீர் நிலை மேம்பாடு, தண்ணீர் மேலாண்மை அனைவருக்கும் சுத்தமான குடிநீர் - நீலப் புரட்சி


விவசாயம் - இயற்கையும், அறிவியலும் சார்ந்த நிரந்தரப் பசுமைப் புரட்சி, விவசாய பொருள்கள் விலை நிர்ணய

 உரிமை, உற்பத்தி முதல் - ஏற்றுமதி வரை உலக சந்தை மயமாக்கல், காடு வனம் அடர்த்தியாக வளர்ப்பு

மீனவர்களுக்கு வாழ்வாதார மேம்பாடு உறுதி, ஆழ்கடல் மீன்பிடிப்பு பொருளாதார வளர்ச்சி

கிராமப்புற சுயசார்பிற்கும், தொழிலுக்கும், விவசாயத்திற்கும் மதிப்புகூட்டுதல், ஏற்றுமதிக்கும், வாழ்வாதாரத்திற்கும் மற்றும் மறுமலர்ச்சிக்கும், SMART VILLAGE உருவாக்கத்திற்கும் - அப்துல்கலாம் புரா திட்டம்

அரசு பள்ளிக்கல்வி உலகத்தரத்தில் மேம்பாடு, அடிப்படை கல்வி சீர்திருத்தம், பயிற்றுவிக்கும் முறை, பாடத்திட்டம்

மாற்றம், மேல்நிலைகல்வி 9-10 வரை சீர்திருத்தம், மாணவர்கள் படிப்பு சுமை குறைப்பு.

1.3 கோடிப்பேருக்கு உலக தரம் வாய்ந்த தனித்திறன் மேம்பாடு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வேலைவாய்ப்பு

Follow Us:
Download App:
  • android
  • ios