தமிழக அரசியல் மற்றும் ஊழல் குறித்து கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் கமல் ஹாசனுக்கு, பேஸ்புக் பக்கத்தில்  நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் அண்மையில் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக தமிழக அமைச்சர்களின் கண்டனங்களுக்கு அவர் ஆளானார்.

இது தொடர்பாக கமலுக்கும், அமைச்சர்களுக்கும் இடையேயான வார்த்தை மோதல்கள் நடந்து வருகிறது. ஊழல் குற்றச்சாட்டு குறித்து பொத்தாம்பொதுவாக கூறக் கூடாது என்று அமைச்சர்களும், ஊழல் குறித்த விவரங்களை அத்துறைக்கு அனுப்புமாறு நடிகர் கமலும்
கூறியுள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு பல்வேறு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையில், அவரின் ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் கமல் ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு.

இது குறித்து, நடிகை குஷ்பு, பேஸ்புக் பக்கத்தில் நடிகர் கமல் ஹாசனுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில், ஊழலுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள உங்களை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது. என்ன நடந்தாலும் ஒரு தோழியாக நான் உங்கள் பின்னால் நிற்பேன். நீங்கள் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளமான டுவிட்டரில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில், கமல் ஹாசனுக்கு ஆதரவாக குஷ்பு கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.