Kamal Hassan twitter about kalam family
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தனது பயணத்தைத் தொடங்கிய இடத்தில் இருந்து, தானும் தனது பயணத்தை தொடங்கியுள்ளது பெருமையா உள்ளது என்றும், பிரமிப்பூட்டும் எளிமையை அப்துல் கலாம் இல்லத்தில் கண்டதாகவும் கமல்ஹாசன் தனத டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் இன்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அப்துல் கலாமின் சகோதரர் முத்து மீரான் மரைக்காயரை சந்தித்த கமல்ஹாசன், அவரிடம் ஆசி பெற்றார்.

அப்துல் கலாம் வீட்டில் உள்ளவர்கள் கமலுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.அவருக்கு சிறப்பு பரிசு அளித்தனர். மேலும் அப்துல் கலாம் வீட்டில் உள்ள நூலகத்தையும் பார்வையிட்டார்.
இது தொடர்பாக கமல் தனது டுவிட்டரில் பக்கத்தில் கலாமின் குடும்பத்தின் எளிமை குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன் கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தனது பயணத்தைத் தொடங்கிய இடத்தில் இருந்து, தானும் தனது பயணத்தை தொடங்கியுள்ளது பெருமையா உள்ளது என்றும் கமல் தனத டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
