நடக்கவிருக்கும் தேர்தலுக்காக தனது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அரசியல் வேலைகளில் கவனம் செலுத்தும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.  மக்களவை தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்திருந்தார். அதுமட்டுமல்ல திமுக அதிமுகவுடன் கூட்டணி இல்லை என அதிரடியாக கூறியுள்ளார். 

முன்னணி ஆங்கில இணைய தளத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
அளித்த பேட்டியில்;  மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம்  தனித்தே போட்டியிடும். அதில் உறுதியாகவும் உள்ளோம் எனக் கூறினார். மேலும் திமுக மற்றும் அதிமுகவுடனும் உறுதியாக கூட்டணி  சேரமாட்டோம் எனக் கூறியுள்ளார்.

மேலும், நாங்கள் தனித்துப் போட்டியிடவே விரும்புகிறோம்.  அந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறோம். எங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மாட்டோம். நாங்கள் பொய் சொல்ல விரும்பவில்லை. அதற்குப் பின் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை ஏற்படும் என்று பயப்படுகிறோம், 40  தொகுதிகளிலும் போட்டியிடப்போகிறோம், அதற்கான பணிகளை மேற்கொண்டுவருகிறோம் இவ்வாறு கூறியுள்ளார்.