நான் சொன்னது போலவே திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பிரிவு ஏற்பட்டுள்ளது என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார் .  பத்தாண்டுகளுக்கும் மேலாக திமுக காங்கிரஸ் கூட்டணி நீடித்து வந்த நிலையில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக திமுக காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது .  திமுக கூட்டணி தர்மத்தை மீறி விட்டது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி விடுத்த அறிக்கை திமுக காங்கிரஸ் கூட்டணியில் பிளவுக்கு ஆச்சாரமாகிஉள்ளது. 

அரசல்புரசலாக திமுக-காங்கிரஸ் கூட்டணி பிளவு  குறித்து செய்திகள் வெளியாகி வந்த நிலையில் ,  திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை காங்கிரசுக்கு ஓட்டே இல்லை என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதை வெளிப்படையாக உடைத்துள்ளார் .  இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே பிரிவினை ஏற்படும் என்று ஏற்கனவே நான் சொல்லியிருந்தேன் ,  அது தற்போது நடந்து கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்என கூறியுள்ளார். 

திமுகவுடன் காங்கிரஸ் கட்சிக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை ,  திமுக காங்கிரஸ்  கூட்டணிக்கும் ,  உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிக்கைக்கும் சம்பந்தமில்லை .  அது முழுக்க முழுக்க உள்ளாட்சி தொடர்பானவை .  அதேபோல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் முக ஸ்டாலின் தலைமை ஏற்று தமிழக முதலமைச்சராக அவர்  வரவேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து கிடையாது என கூறி காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி திமுகவை  சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில் ,  கமலின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .