யார் என்று புரிகிறதா  இவன் தீ என்று தெரிகிறதா தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா? இந்த வரிகள் கமலுக்கு மட்டுமே சொந்தமானது. ஆமாம் அப்படித்தான் தடைகளை உடைத்து சாதனை படைத்து வருகிறார்.

என்னதான் ரஜினிகாந்த் மாஸ் ஹீரோ, சூப்பர் ஸ்டார் என புகழ்ந்து வந்தாலும் தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியல் அதகளம் செய்வது என்னவோ உலகநாயகன் தான் அரசியல் கட்சி தொடங்கியது மட்டும் முந்தவில்லை, சமூக வலைதளங்களில் ரஜினியை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

கமல் ட்விட் போடுவதும் அன்றைய நாளே அது ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவதும் தமிழ்நாட்டின் தற்கால அரசியல் நிலைமையாக மாறியிருக்கிறது. கமலின் ட்விட்டர் கருத்துக்களை மதுரை பேரகராதி கொண்டு அலசினால் கூட பொருள் கொள்ள முடியாது. சென்னை பல்கலைக்கழகம் தயாரித்திருக்கும் லெக்சிகனை வைத்து வரிக்கு வரி பார்த்து பொருள் சொல்ல முயன்றால் கூட புரியும் படி விளக்கம் கொடுக்க முடியாத அளவிற்கு தமிழ் அறிஞர்களையே அலறவிடுவார் ஆண்டவர்.

பொது ஊடகத்தில் இப்படி புரியாமல் கமல் போடும் கருத்துக்கள் தவறான புரிதலை உருவாக்கி வருவதை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும், கமல் புரியும்படி பேச வேண்டும் என்று ஆண்டவரிடம் அழுது புலம்பாத குறையாக அரசியல் கட்சி புள்ளிகளே கேட்டு வந்தது. கமல்ஹாசன் ட்விட்டர் தளத்தில் அரசியல் கருத்துகளையும், விமர்சனங்களையும் வெளியிட்டபோது அது சினிமா அரசியல் தளங்களில் கவனிக்கப்பட்டது.

இப்போது அவர் ஓர் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர். அரசியல்வாதிகள் போல் அல்லாமல் இன்னும் சினிமா நடிகராகவே அவரது அன்றாட செயல்பாடுகள் இருப்பதாகக் சில அரசியல் அரசியல் புள்ளிகள் விமர்சனத்தை அடுக்கினாலும் முதல்முறையாக வாக்களிக்க காத்திருக்கும் இளைஞர்கள் சமூகவளைதளங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். ஒரு விஷயத்தை இளைஞர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதற்கு ட்விட்டரை பயன்படுத்துகிறார் கமல். நடிகர், நடிகைகளை சமூக வலைத்தளங்களில் தொடருவோர் எண்ணிக்கை, அவர்களுக்கு தனி அந்தஸ்தாக கருதப்படுகிறது.

சரி விஷயத்துக்கு வருவோம், கமலும்,  ரஜினியின்  என்னதான்  நீண்ட கால நண்பர்கள் என்றாலும் கூட, கர்நாடகாவில் இருந்து வந்த ரஜினி தமிழகத்தில் சினிமாவில் நம்பர் 1 ஆக இன்றுவரையில் இருந்து வருவதில் கமலுக்கு ஒரு ஆதங்கம் உண்டு. நடிப்பைபொறுத்தவரையில் ரஜினியை விட கமல் எட்ட முடியாத உயரத்தில் இருந்தாலும்கூட பெயரும், புகழும் என்னவோ ரஜினியைதான் அப்பிக் கொண்டிருக்கின்றன.

இதில் நெடுங்காலமாக ஆதங்கத்தில் இருக்கும் கமல், ரஜினி சில மாதங்களுக்கு முன்அரசியல் எண்ட்ரியை தீவிரமாக யோசிக்க துவங்கியதும் டென்ஷன் ஆனார்.
’சினிமாவில் அவரிடம் பின் தங்கினேன், ஆனால் அரசியலில் தமிழ்நாட்டில் என்உரிமையை விடமாட்டேன்.’ என்று தனக்கு மிக நெருக்கமான பச்சை தமிழ் நண்பர்கள்சிலரிடம் சபதமே போட்டார். அதன் படியே திடுதிப்பென ட்விட்டர் அரசியலை துவக்கிஆளுங்கட்சியுடன்மோதலை உருவாக்கி, டோட்டல் தேசத்தையும் தன் பக்கம் திருப்பினார்.  இதில் ரஜினியின் பரபரப்பு  அவுட் ஆகியது.

மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி உள்ளூரில் சுற்றுப்பயணம் செய்யும் உலகநாகயன் அடுத்தடுத்த அதிரடியான கருத்துகளை சமூக வலைதள ஊடகமான ட்விட்டரில் பதிவிட்டுவருகிறார். இதனையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் மட்டுமல்லாமல் கமலால் ஈர்க்கப்பட்ட இளைஞர்களும் ட்விட்டரில் கமலை பின் தொடர்கிறார்கள். கமல் ரஜினி இருவர் பற்றியும் கிராமங்கள் முதல் மாநகரங்கள் வரை மக்களிடம் கமலுக்கு தான் மவுசு ஜாஸ்தி.

இந்த கணக்கை ட்விட்டரில் கமலை பின்தொடர்வோரை வைத்தே தெரிந்துகொள்ளலாம். இதில் ஆச்சர்யம் கலந்த ஷாக் என்ன தெரியுமா? ரஜினி மாஸ் ஆனவர், இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் சிறப்பாக செயல்படுவார் என தமிழ்நாட்டில் ஊடகங்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இதெல்லாம் சினிமாவில்தான். உண்மையில் அப்படி ஒரு பிம்பமே இல்லையாம்.

அரசியல் ரீதியாக ரஜினிக்கு முதல் நிலை வாக்காளர்களிடம் செல்வாக்கு அவ்வளவாக இல்லை என்பது தெரிகிறது. மேலும் இருபது முதல் நாற்பது வயதுக்குட்பட்ட சமூக வலைதளங்களில் இருக்கும் இளைஞர்கள் கமலின் அரசியல் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு ட்விட்டரில் பின் தொடருகின்றனர்.

கமலை பின் தொடர்வோர் 4,686,839 பேர், ரஜினியை பின்தொடர்வோர்  4,614,947 பேர். ரஜினி ட்விட்டரில் கணக்கை தொடங்கியது February 2013 கமல் ட்விட்டரில் தொடங்கியது December 2015 இரண்டு வருடத்திற்குப் பின் கமல் இணைந்திருந்தாலும்  ரஜினியை ஃபாலோ பண்ணுபவர்களின் எண்ணிக்கை விட கமலே அடித்து நொறுக்கி அதகளம் செய்து வருகிறார்.

ஆண்டவர் ஆண்டவர் தான்!