அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் இன்று மாலை செய்யவிருந்த பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

 

அரவக்குறிச்சி இடைத்தேர்தலை முன்னிட்டு தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த கமல் ஹாசன், ‘’ சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாத்ராம் கோட்சே. அங்கு துவங்குகிறது அது. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன். இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக இருக்க வேண்டும் என்பது தான் நல்ல இந்தியனின் ஆசை. நான் நல்ல இந்தியன் என்பதை மார் தட்டி சொல்வேன். மனிதர்கள் மீது நான் நேசத்தை காட்டுகிறேன்’’ எனப் பேசி இருந்தார் கமல் ஹாசன்.

இதற்கு அரசியல்வாதிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் இருந்து கமல்ஹாசனுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், அசம்பாவிதங்கள் நடப்பதை தடுக்க இன்று மாலை கமஹாசன் மேற்கொள்ள இருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.