அதிமுகவில் இருந்து தினகரன் ஆதரவாளராக மாறிய கள்ளக்குறிச்சி பிரபு தற்போது தினகரன் மற்றும் எடப்பாடி என இரண்டு தரப்பிடம் இருந்து ஆதரவு இல்லாமல் தவித்து வருகிறார்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் பிரபு. சட்டத்துறை அமைச்சராக இருக்கும் சண்முகத்தின் மீதான அதிருப்தி காரணமாக அவர் தினகரன் ஆதரவாளராக மாறினார். மேலும் சட்டப்பேரவையிலும் கூட தினகரனுடன் வெளிநடப்பு செய்வதே தினகரனுக்கு ஆதரவாக பேசுவது என அதிமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து இருந்தார். இந்த நிலையில்தான் அவரது எம்.எல்.ஏ. பதவியை பறிக்க சபாநாயகர் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் பிறகு பிரபு எடுத்த முடிவு தான் அவரது அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறியாகியுள்ளது. தினகரன் அரவணைப்பில் இருந்த பிரபு சபாநாயகரிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிறகு அவருடனான தொடர்பை துண்டித்து உள்ளார். இதற்கு காரணம் எடப்பாடி தரப்பில் இருந்து வந்த தூது தான். ஆனால் அந்த தூதையும் முறையாக கையாளாமல் எந்தவொரு வாக்குறுதியையும் அவர்களுக்கு அளிக்காமல் அவர்களிடமிருந்து பெறாமல் இழுத்தடித்துள்ளனர். இந்த இடைவெளிகள் தினகரன் ஆதரவாளர்களாக இருந்த ரத்தினசபாபதி மற்றும் கலைச்செல்வன் உச்சநீதிமன்றம் சென்று சபாநாயகரின் நோட்டீசுக்கு தடை பெற்றுவிட்டனர். 

இதனால் குழம்பிப் போன பிரபு சபாநாயகர் அலுவலகத்தின் செயலாளரை சந்தித்து தனக்கும் உச்ச நீதிமன்றத்தின் தடை பொருந்துமா என்று கேட்டுள்ளார். ஊடகங்களிடம் பொருந்தும் என்று கூறிய செயலாளர் பிரபுவுக்கு முறையாக பதில் அளிக்கவில்லை. இதனால் அவர் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தனியாக ஒரு மனுவை தாக்கல் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளானார். இதற்கு தினகரன் தரப்பில் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை.

 

காரணம் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது பயந்துபோய் பிரபு தினகரன் தரப்பில் இருந்து ஒதுங்கி இதுதான் என்கிறார்கள். அதேசமயம் எடப்பாடி தரப்பில் இருந்தும் சரியான வாக்குறுதியை பெறாத நிலையில் தற்போது தனது எம்.எல்.ஏ. பதவி இருக்குமா இருக்காதா தன்னை அதிமுகவில் மீண்டும் சேர்த்துக் கொள்வார்கள் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று சமாதானம் செய்ய முடியுமா என்று தவித்து வருகிறார் பிரபு. ஆனால் பிரபுவை அதிமுகவிற்கு மீண்டும் அனுமதிக்காமல் அவரது அரசியல் வாழ்க்கையில் முடித்துவிட வேண்டும் என்று ஒரு அமைச்சர் பக்காவாக திட்டம் தீட்டி செயல்படுத்தி வருவதாக கூறுகிறார்கள்.