சிறுமியை எரித்து கொலை செய்த முருகன் மற்றும் கலிய பெருமாளை அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்து இபிஎஸ், ஓபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது  "விழுப்புரம்‌ தெற்கு மாவட்டம்‌ திருவெண்ணணய்நல்லூர்‌ ஒன்றியம்‌ கழகத்தின்‌ கொள்கை குறிக்கோள்களுக்கும்‌ கோட்பாடுகளுக்கும்‌ முரணான வகையில்‌ செயல்பட்டதாலும்‌, கழகத்தின்‌ கண்ணியத்திற்கு மாசு ஏற்படும்‌ வகையில்‌ நடந்து கொண்டதாலும்‌, கழகக்‌ கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும்‌ அவப்‌ பெயரும்‌ உண்டாகும்‌ விதத்தில்‌ செயல்பட்ட காரணத்தினாலும்‌, விழுப்புரம்‌ தெற்கு மாவட்டம்‌, திருவெண்ணெய்நல்லூர்‌ ஒன்றியத்தைச்‌ சேர்ந்த,
கலியபெருமாள்‌, (சிறுமதுரை புதுக்காலனி கிளைக்‌ கழகச்‌ செயலாளர்‌) முருகன்‌, (சிறுமதுரை காலனி கிளைக்‌ கழக மேலமைப்புப்‌ பிரதிநிதி) ஆகியோர்‌ இன்று முதல்‌ கழகத்தின்‌ அடிப்படை உறுப்பினர்‌ பொறுப்பு உட்பட அனைத்துப்‌பொறுப்புகளில்‌ இருந்தும்‌ நீக்கி வைக்கப்படுகிறார்கள்‌.கழக உடன்பிறப்புகள்‌ யாரும்‌ இவர்களுடன்‌ எவ்விதத்‌ தொடர்பும்‌ வைத்துக்கொள்ளக்‌ கூடாது எனக்‌ கேட்டுக்கொள்கிறோம்‌.