டாக்டரிடம் கருணாநிதி கூறிய "ஒரே ஒரு பதில்"..! 

தலைவர் கருணாநிதி தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்து கோடி கணக்கில் தொண்டர்களை தனக்கே உரித்தாக்கியவர். இப்படிப்பட்ட ஜாம்பாவான், அரசியல் மேதை நேற்று வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். 

கருணாநிதியை பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவர் ஒரு பத்திரிக்கையாளர், கதாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், எழுத்தாளர், பேச்சாளர், அரசியல்வாதி என பட்டியல் நீண்டுக்கொண்டே செல்லும்.

இவரிடம் எதை பற்றி கேட்டாலும், அதற்கு மிகவும் சாதுர்த்தியமாகவும் கருத்தாகவும் பதில் அளிக்கக் கூடியவர். இப்படிப்பட்டவர் ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது மருத்துவரிடம் அளித்த பதில், அனைவரையும் வியக்க வைத்தது என துரைமுருகன் பகிர்ந்து உள்ளார். 

மருத்துவமனையில் அனுமதித்து இருந்த போது, டாக்டர் கலைஞரை பரிசோதனை செய்து உள்ளார். அப்போது உடல் வெப்பநிலை, இதய துடிப்பு, ரத்த அழுத்தம் கடைசியாக மூச்சு என சோதனை செய்யும் போது, 'மூச்சை நல்லா இழுத்துப்புடிங்க' என மருத்துவர் கூற, கருணாநிதி மூச்சை இழுத்துப் பிடிக்க....சில வினாடி கழித்து 'இப்போ மூச்சை விடுங்க' என டாக்டர் கூற, உடனே கலைஞர் ' அதை விடக்கூடாது என்பதற்காக தானே இங்கு வந்திருக்கேன் என கலைஞர் கூறியதை பார்த்து அனைவரும் வியந்து ஆச்சர்யத்தில் சிரித்தனர். 

இந்த ஒரு தருணத்தில், துரைமுருகன் கலைஞருடன் இருந்துள்ளார்.. இது போன்ற பல முறை பல கேள்விகளுக்கு நகைச்சுவையாக பதில் கூறும் கலைஞரின் சாதுர்த்தியம் இனி எப்போது கேட்க முடியும் என துரைமுருகன் கலைஞர் உடனான தனது நினைவலைகளை பகிர்ந்து உள்ளார்.