காடுவெட்டி குரு என்றாலே ஆக்ஷன் தான், பார்ப்பதற்கு கரடு மூடுரடான மனுஷனா இருந்தாலும் குழந்தை மாதிரிதான். கடந்த காலங்களில் திமுக,அதிமுக,மதிமுக, விசிக போன்ற காட்சிகளை ராமதாசும் அவரது மகன் அன்புமணியும் விமர்சித்ததைவிட காடுவெட்டி குரு விமர்சனம் தான் செம்ம டேர்ராக இருக்கும், அதுவும் வருடத்திற்கு ஒரு நாள் நடக்கும் வன்னியர் சங்க மாநாட்டில் அவர் பேசும் பேச்சு வன்னிய இளைஞர்களை உசுப்பேத்தி விடும் அளவிற்கு மாஸ் காட்டுவார். கருணாநிதி, ஜெயலலிதா தொடங்கி திருமாவளவன் வரை வில்லனாக இருப்பவர் காடுவெட்டி குரு தான்.

காடுவெட்டி குருவை எப்படி பயன்படுத்தினார்கள் என குரு குடும்பத்திற்கு நெருக்கமானவர் ஒருவர் சொன்ன தகவல்; கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய குரு, கருணாநிதியை கடுமையாக விமர்சித்தார். அதனால், குறுமீது நடவடிக்கை எடுத்த கருணாநிதியிடம் சமரசம் பேசி, குரு மேல் கோபமாக இருந்த அவரை சமாதானப்படுத்தியது திருமாவளவன்.

ஆனால், அடுத்து வன்னியர் சங்க பவுர்ணமி விழாவில், கருணாநிதி ஜெயலலிதாவை கோபப்படுத்தியதைப்போலவே திருமவளவனையும் விசிகவையும் அதிகமாக விமர்சித்தவர் குருதான், இரட்டை குவளை முறையை அந்த பகுதியில் ஒழித்து தலித் மக்களிடமும் திருமாவளவனிடமும்  நல்லமனிதர் என பெயரெடுத்த குருவை, அந்த வன்னியர் சங்க விழாவில் வில்லனாக சித்தரிக்கப்பட்டுவிட்டார்.

அப்போது வன்னியர் சங்கத்தினருக்கும் விசிகவினருக்கும் ஏற்பட்ட கலவரம் சமயத்தில், குரு கைது செய்யப்பட்டார், பாமகவினர் 134 பேர் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டது . அதிகமாக தாக்கப்பட்டதும், வழக்கு பதிவானது குரு மீது மட்டும் தான். ஆனால் குரு விமர்சித்த கட்சிகளுக்கு பூங்கொத்து கொடுத்து உறவு கொண்டாடியது பாமக என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தனக்கும், தனது மகனுக்கும் ஏதாவது பிரச்சனை என்றால் அங்கு குரு மூலம் வன்னியர் சங்கத்தை வைத்து போராட்டம் நடத்துவது, அதிமுக திமுக, விசிக்கவை கடுமையாக  விமர்சித்துப் பேச சொல்லி குருவை பல கட்சிகளுக்கும் எதிரி ஆக்கியது பாமக ராமதாஸ், ஆனால், ஆனால் குரு விமர்சித்த கட்சிகளுக்கு பூங்கொத்து கொடுத்து உறவு கொண்டாடியது பாமக குரு குடும்பம் மட்டுமல்ல வன்னிய இளைஞர்களும் ராமதாஸ் குடும்பத்தின் மீது கொந்தளித்துள்ளனர்.