பாமக நிறுவனர் ராமதாஸின் வலது கரமாக திகழ்ந்தவர் காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். பாமக மற்றும் வன்னிய சங்கத்தில் தொண்டர்களால் காடுவெட்டியார் என்றும் அழைக்கப்பட்டு வந்த இவர் தமிழக அரசியல்வாதி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணித் தலைவராகவும், மாநில வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்தார்.

ராமதாஸின் நெருங்கிய உறவினர் ஆவார். 2 முறை MLA வாகவும்  இரண்டுமுறை குண்டர் சட்டத்தில் கைதாகி சிறை சென்றவர். இதனாலேயே கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் மத்தியில் செல்வாக்கு கூடியது. குரு என்றாலே கம்பீரம் ஏன் வன்னிய இளைஞர்கள் வர்ணித்து வந்தனர். வன்னிய இளைஞர்கள் மத்தியில் ஹீரோவாக திகழ்ந்தவர் தான் இந்த குரு, ஒரு கட்டத்தில் ராமதாஸ் குடும்பத்தினரை ஓவர் டேக் பண்ணும் அளவிற்கு செல்வாக்கு எகிறியது.

நாளுக்கு நாள் குருவிற்கு கிடைத்த  செல்வாக்கு அன்புமணியின் வளர்ச்சிக்கு தடையாக அமைந்ததை கண்கூடாக பார்க்க முடிந்தது. இதனால், அக்கட்சியைப் பொறுத்தவரையில் தந்தையையும் தம்மையும் மட்டுமே முதன்மைப்படுத்த வேண்டும் என்பதில் அன்புமணி உறுதியாக உள்ளாராம். இதனால் வன்னியர் சங்கத்துக்கு தலைவராக இருந்த  காடுவெட்டி குருவை அமைதியாக இருக்குமாறு பல நெருக்கடிகள் கொடுக்கப்பட்டதால். அதுமட்டுமல்ல, அவரை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்கவும் வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

குரு மறைந்த நிலையில் தற்போது அவரது மகன் கனலரசன் ராமதாஸ் குடும்பத்தின் மீது வைத்துள்ள அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளில் முதன்மையானது, அன்புமணியின் வளர்ச்சிக்கு குரு தடையாக இருப்பதால் தனது அப்பாவை ஓரம்கட்ட நினைத்ததும், அவரது சாவுக்கு காரணம் அன்புமணியும் ராமதாசும் தான் என சொல்வது.

இந்நிலையில் இன்று அவர் அளித்துள்ள பேட்டியிலும், அதையே தான் சொல்கிறார். தனது தந்தை காடுவெட்டி குருவின் மரணம் இயற்கையானதல்ல, அன்புமணியின் வளர்ச்சிக்கு குரு தடையாக இருப்பதாக கருதினார்கள், திட்டமிட்டு கொன்றாக கூறியிருக்கிறார்.மேலும், குரு மருத்துவமனையில் இருந்த போது அவருக்கு எதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும்?அவர் இறந்து விடுவார் என்று  ராமதாஸின் மகன் அன்புமணி சொன்னதாக குருவின் மகன் கனலரசன் பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாமக – அதிமுக கூட்டணி கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், காடு வெட்டி குரு மறைவுக்கு பிறகு, ராமதாஸ் மீது கடும் கோபத்தில் உள்ள குரு குடும்பத்தினர், வன்னியர்கள் நாடாளுமன்ற தேர்தலின்போது, பாமக, அதிமுக கூட்டணிக்கு எதிராக களமிறங்கி வேலை செய்வார்கள்  என ஏற்கனவே மனவுளைச்சலில் இருக்கும் ராமதாஸ் குடும்பத்திற்கு கனலரசனின் பேட்டி மேலும் கடுப்பை கிளப்பியிருக்கிறதாம்.