’எங்கப்பா விரோதி... திருமாவளவனுடன் நட்பா..?’ பாமகவை கதிகலங்க வைக்கும் காடுவெட்டி குருமகன்..!
திருமாவளவனுக்கு எதிராக பேச வைத்து விட்டு மற்ற சாதிகாரர்களின் வெறுப்பை எனது தந்தை குரு மீது வரவழைத்ததே பாமக தலைமைதான் என காடுவெட்டி குரு மகன கனலரசன் தெரிவித்துள்ளார்.
திருமாவளவனுக்கு எதிராக பேச வைத்து விட்டு மற்ற சாதிகாரர்களின் வெறுப்பை எனது தந்தை குரு மீது வரவழைத்ததே பாமக தலைமைதான் என காடுவெட்டி குரு மகன கனலரசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், சகோதரி மீனாட்சி, தாயார் கல்யாணி அம்மாள் மூவரும் கூட்டாக அளித்த பேட்டி அளித்தனர். அப்போது கனலரசன் கூறுகையில், ’’பாமகவை நம்பி ரொம்ப மோசம் போயிட்டோம். இந்த சமுதாயத்தை இனியும் அவர்கள் ஏமாற்ற முடியாது. எங்கள் சமுதாயத்தில் பாமகவுக்கு இருந்த அங்கீகாரமும் போயிடுச்சு. 90 சதவிகித நம்பிக்கையை இழந்துட்டாங்க. மீதி இருக்கிற 10 சதவிகிதம் பேர் இந்த தேர்தலில் வேலையை காட்டிடுவாங்க.
எங்களது உறவினர்களின் 25 குடும்பங்களை போல இனி வேறு எந்த குடும்பங்களும் கஷ்டப்பட்டு விடக்கூடாது. எங்க சமுதாயத்துல இருக்கிற இரண்டறை கோடி மக்களும் கஷ்டப்பட்டு விடக்கூடாது. வன்னியர் சமுதாய நலனுக்காக பாமகவை எதிர்த்து நாங்கள் ஒரு அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறோம்.
எங்களது முக்கிய கோரிக்கை வன்னியர் பொதுநல வாரியம் கொண்டு வரவேண்டும். அனைத்து அறக்கட்டளை சொத்துக்களையும் அதன் கீழ் கொண்டு வரவேண்டும். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு சரியான முறையில் அவர்களை சென்றடைய வேண்டும். கல்விக் கோயில் என்பது சரஸ்வதி பொறியியல் கல்லூரியாக மாற்றப்பட்டு விட்டது. அங்கே காசு வாங்கிக்கொண்டு தான் சீட்டுக் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். என்னோட மகன் உட்பட யாருமே அரசியலுக்கு வரமாட்டாங்கன்னு ராமதாஸ் சொன்ன வார்த்தையை ஏன் காப்பாற்றவில்லை. பாமக கூட்டணி இணைந்தது வரை ஒரு வார்த்தையைக்கூட காப்பாற்றவில்லை. எங்கள் சமுதாய நலன் கருதி ஒரு அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகிறோம்.
எங்களது கோரிக்கையையும், நிபந்தனைகளையும் யார் ஏற்கிறார்களோ அவர்களுக்கு மாவீரன் ஜெ.குரு வன்னியர்சங்கத்தின் ஆதரவை கண்டிப்பாக அளிப்போம். வன்னியர்களுக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை என்பதால் இந்த அமைப்பை உருவாக்கி இருக்கிறோம். எனது அப்பா சில ஜாதிகளை பற்றி அவராகவே பேசவில்லை. பாமக தலைமை சொல்லித்தான் அப்படி பேசியிருக்கிறார். மற்ற சாதிகிகாரர்கள் எங்கள் அப்பாவை விரோதியாக பார்ப்பதற்கு காரணம் பாமக தலைமைதான்.
எங்கப்பாவை பாமக ஒரு கருவியாகத்தான் பயன்படுத்திக் கொண்டது. திருமாவளவனை திட்டச் சொல்லிவிட்டு, அன்று மாலையே அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்ல அன்புமணி கிளம்பி விடுவார். இதெல்லாம் மூத்த பிள்ளையை கிள்ளிவிட்டு ரெண்டாவது பிள்ளையை சந்தோஷப்படுத்தும் குணம்’’ என அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில் கனலரசனின் பேட்டி பாமக கூடாரத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.