காங்கிரஸில் இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து, அவரை மாநிலங்களவை எம்.பி. தேர்வு செய்யப்பட்டு மத்திய அமைச்சராக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 2018-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 114 இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. முதல்வர் பதவி கிடைக்காததால் ஜோதிராதித்ய சிந்தியாவும், அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதாலும் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்த சூழலை சரியாக பயன்படுத்தி 107 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டுள்ள பாஜக ஆட்சியை கைப்பற்ற ரகசியமாக பல்வேறு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியது. இதற்கு அச்சாரமாக ஜோதிராதித்யா சிந்தியாவை பாஜக சரியாக பயன்படுத்திக்கொண்டது.

இதையும் படிங்க;- சிந்தியாவின் மகனை சிந்திக்க வைத்த பிரதமர் மோடி... 60 நிமிடங்களில் காங்கிரஸ் ஆட்சியை காலி பண்ணிய பாஜக..?

இந்நிலையில், பிரதமர் மோடியை சந்தித்து வந்த ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவருடைய ஆதரவாளர்களாக கருதப்படும் அமைச்சர் 6 பேர் உள்பட 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று தங்களது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தனர். இதனையடுத்து, ஜோதிராதித்ய சிந்தியா நேற்று மாலையிலேயே பாஜகவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸில் இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 
இதைத் தொடர்ந்து அவருக்கு பாஜகவில் எத்தகைய பொறுப்பு வழங்குவது என்பது பற்றி பிரதமர் மோடியும், உள்துறை  அமித்ஷாவும் ஆலோசனை நடத்தினார்.  இதில், ஜோதிராதித்ய சிந்தியாவை மாநிலங்களவை எம்.பி.யாக்கி மத்திய அமைச்சர் பதவி கொடுக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க;- எடப்பாடியாருக்குத்தான் தெரியல... ஓ.பி.எஸுக்குமா புரியல..? தென்மாவட்ட அதிமுகவில் களேபரம்..!

மத்திய பிரதேசத்தில் இருந்து 3 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க 26-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான மனுதாக்கலுக்கு நாளை மறுநாள் கடைசி நாளாகும். எனவே நாளை சிந்தியாவை வேட்பாளராக அறிவிப்பது பற்றிய தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.