கடந்த சில நாட்களுக்கு முன்பு சசிகலாவை சந்திப்பதற்காக பெங்களூரு போயிருந்தார் இளவரசி மகன் விவேக். ஆனால், அவரை சந்திக்க முடியவில்லை.நேற்று ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராக வேண்டியிருந்ததால், பெங்களூருவில் தங்காமல் திரும்பி சென்னைக்கே வந்துவிட்டார்.

என்ன திடீர் விசிட்? ஆமாம் ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. ஜெயா டிவி நிர்வாகத்தை ஜெயலலிதா உயிரோடு இருந்த சமயத்தில் கவனித்துவந்த தினகரனின் மனைவி அனுராதா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயா டிவி அலுவலகத்துக்கு வந்திருக்கிறார்.

வந்ததும் நேராக விவேக் அறைக்கு சென்றிருக்கிறார். (ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பொறுப்புகள் அத்தனையும் வாங்கிவிட்டார் இளவரசி மகன் விவேக்.) விவேக்குடன் கிட்டதட்ட 15 நிமிடங்கள் பேசியிருக்கிறார். அதன் பிறகு அந்த அறையில் இருந்து இறுக்கமான முகத்துடன் விவேக் விறுவிறுவென வெளியே வந்துவிட்டாராம்.

அப்போது வெளியில் வந்த விவேக், இன்னும் ஜெயா டிவி அலுலவகம் பக்கம் இதுவரை வரவே இல்லை. ஜெயா டிவி முக்கிய நிர்வாகிகளை அழைத்த அனுராதா, ‘இவ்வளவு நாளா எனக்கு சில வேலைகள் இருந்த காரணத்தால் நான் ஒதுங்கி இருந்தேன். இனி நான்தான் நிர்வாகத்தை கவனிப்பேன். எதுவாக இருந்தாலும் எனக்கு ரிப்போர்ட் பண்ணனும். விவேக் இனி இங்க வரமாட்டாரு...’ என சொன்னாராம்.

அணுவின் திடீர் வருகையால் என்ன சொல்வதெனத் தெரியாமல் திகைத்து நின்றுள்ளனர், ஜெயா டிவி ஊழியர்கள். அதன் பிறகு பக்காவாக ஜெயா டிவி அலுவலகத்துக்கு வந்து விடுகிறாராம் அனு.

தினமும் ஜெயா டிவியை பார்ப்பவர்களுக்கு தெரியும், அது என்னன்னா? கடந்த நான்கு நாட்களாக தினகரன் தொடர்பான அத்தனை செய்திகளுக்கும் ஜெயா டிவியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ‘அம்மா இருந்தபோது, அம்மாவை பற்றிய செய்திகளுக்கு எப்படி அட்டன்ஷன் கொடுப்போமோ அதேபோல தலைவரோட செய்திகளுக்கும், அவரோட அறிக்கைகளுக்கும், சுற்றுப்பயணத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கணும் என கட்டளையாம்.

அம்மா இருந்த வரைக்கும் எப்பவும் ஹெட்லைன்ஸ்ல முதல் செய்தி அம்மாவை பற்றித்தான் இருக்கும். ஆனால், கடந்த சில மாதங்களாக அப்படி வர்றதே இல்ல என டென்ஷன் ஆனாராம். இது நம்ம சேனல். நம்மை நாமதான் ப்ரமோட் பண்ணியாகணும். இனி ஹெட்லைன்ஸ்ல முதல் வர முக்கியமான செய்தி நம்ம தலைவரைப் பற்றித்தான் வரணும். உங்களால் பண்ண முடியலைன்னா வேலயவிட்டுட்டு கிளம்பிடுங்க...

நான் வேற ஆளை வெச்சு பண்ணிக்கிறேன்’ என காட்டமாக கத்தினாராம் அனு.