ஓபிஎஸ்க்கு சாதகமாக வந்த தீர்ப்பு.. அதிர்ச்சியில் எடப்பாடி கூடாராம்..!
கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம், தனது பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட போலீஸ் உதவியுடன், ஆயுதங்களுடன் சென்று தாக்குதல் நடத்தியதால், போலீஸ் பாதுகாப்பை தவறாக பயன்படுத்திய பன்னீர்செல்வத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்துறை செயலாளர், டிஜிபி-க்கு உத்தரவிடக் கோரி அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜா ராம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
போலீஸ் பாதுகாப்பை தவறாக பயன்படுத்தியதாக ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம், தனது பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட போலீஸ் உதவியுடன், ஆயுதங்களுடன் சென்று தாக்குதல் நடத்தியதால், போலீஸ் பாதுகாப்பை தவறாக பயன்படுத்திய பன்னீர்செல்வத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்துறை செயலாளர், டிஜிபி-க்கு உத்தரவிடக் கோரி அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜா ராம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க;- ஓட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த தமிழக முதல்வர்; மாஸ் திட்டத்தை தொடங்கி மாஸ் காட்டிய ஸ்டாலின்
அந்த மனுவில், முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் பன்னீர்செல்வத்துக்கு வழங்கியுள்ள போலீஸ் பாதுகாப்பை அவர் தவறாக பயன்படுத்தியுள்ளார் என்றும், தனி பாதுகாப்பு போலீசாரின் உதவியுடனேயே அதிமுக அலுவலகத்தில் ஆவணங்களை கொள்ளையடித்து சென்றார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வரான பன்னீர்செல்வம், தற்போது அரசிலும், கட்சியிலும் எந்த பொறுப்பிலும் இல்லை. அவருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாத நிலையில், அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்ட போலீசார் மீதும் பாதுகாப்பை தவறாக பயன்படுத்திய பன்னீர்செல்வத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி உள்துறை செயலாளர், டிஜிபி-க்கு மனு அளித்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், எந்த முகாந்திரமும் இல்லாமல், ஆதாரமற்ற குற்றச்சாட்டுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க;- முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் நிதியில் காலை உணவுத் திட்டம்;முதல்வர் முக ஸ்டாலின் கனவுத் திட்டம் நிறைவேறியது