Asianet News TamilAsianet News Tamil

"என்னை மிரட்டிய குரல் தமிழிசை போன்று இருந்தது" - டிஜிபியிடம் புகார் கொடுத்த பின் காங். ஜோதிமணி பேட்டி

jothimani online-harassment
Author
First Published Jan 6, 2017, 1:36 PM IST


காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோதிமணியை ஃபேஸ் புக் வலைதளத்தில் ஆபாசமாக விமர்சித்த பாஜக தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த 22 பேர் மீது டிஜிபி அலுவலகத்தில் ஜோதிமணி புகார் அளித்தார்.

அவருடன் ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பெண்கள் அமைப்பினர் உடனிருந்தனர். பின்னர் ஜோதிமணி கூறியதாவது: 

 பாலியல் வன்முறையை பாஜக கட்டவிழ்த்து விடுகிறது. இது ஆரம்ப கட்ட போராட்டம் தான் . பாஜக இளைஞர்களை எவ்வளவு கேவலமாக நடத்துகிறது என்பதை நாட்டு மக்களுக்கு எடுத்துரைப்பேன். கல்யாண ராமன் தொலைக்காட்சிகளில்  பாஜக முகமாக செயல்பட்டு வருபவர், என்னைப்பற்றியும்  தலைவர்கள் பற்றியும் மிக மோசமாக விமர்சனம் எழுதியுள்ளார்.

jothimani online-harassment

முகநூலில் , வாட்ஸ் அப்புகளில் அவர்கள் செய்யும் மோசமான , இழிவான அர்ச்சனையை நீங்களும் பார்த்துகொண்டுத்தான் இருக்கிறீர்கள் , அரசியல் ஆண்களுக்கு மட்டுமே சொந்த்யம் என்கிற ரீதியில் அவர்கள் கையில் ஆட்சி இருக்கிறது என்ற ஆணவத்தில், மோசமாக அரசியலுக்கு வரும் பெண்களை அடுத்தவருடன் இணைத்து எழுதுவது வாடிக்கையாக உள்ளது.

என்னைப்பற்றி எவ்வளவு மோசமாக எழுதியுள்ளனர் எனபதை நான் மறைக்கவில்லை , அதை எல்லாம் உங்கள் முன்னால் வைக்கிறேன் . விரிவான புகார் கொடுத்துள்ளேன்.

எனக்கு ஆதரவாக டெல்லியில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் 4 ஆம் தேதி நடந்தது , அதில்  பாஜக தொழில் நுட்ப பிரிவு எப்படி பிரதமர் மோடியின் ஆதரவுடன் செயல்படுகிறது என்பதை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளனர். அந்த தொழிநுட்பபிரிவு தலைவராக குஜராத்தை சேர்ந்த ஜெயின் என்பவர் செயல்பட்டு வருகிறார். மத்திய அரசை கடுமையாக விமர்சிப்பபவர்கள் தான் இவர்கள் இலக்கு.

தமிழிசை என்மீது நடத்தப்பட்ட மோசமான இழிவான அர்ச்சனைகளை கண்டித்துள்ளார், ஆனால் மோடிக்கு எதிராக நான் பேசக்கூடாது என தமிழிசை கூறியுள்ளார். மிரட்டும் ஆட்களின் டோனும் , தமிழிசையின் டோனும் ஒரே மாதிரியாக இருக்கு. 22 வாட்ஸ் அப் நம்பர் மற்றும் , 72 பக்க ஆபாச அர்ச்சனைகளையும் கொடுத்துள்ளேன். போலீசாரிடம் ஒப்படைத்துள்ளேன்.

காவல்துறை உறிதியான நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். தேசிய அளவில் ஐடி விங் வைத்துள்ள்னர். யாரெல்லாம் மக்களுக்கு ஆதரவாக பேசுகிறார்களோ அவர்களை உளவியல் ரீதியாக தாக்குகின்றனர்,

பணமதிப்பு குறைவால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், கடும் வறட்சி நிலவுகிறது. ஆடு மாடுகளை விற்க முடியாமல் தவிக்கின்றனர். இதை கூட விமர்சிக்க கூடாதா? இதற்கு ஆபாசமாக விமர்சிப்பதா? இவர்களின் செயல் இது போன்ற மக்கள் பணியில் இருப்பவர்களை குறிவைத்து ஆபசமாக தாக்குவது , அவர்களை அவமான படுத்துவது தான். 

என் போன்றவர்களை , காங்கிரஸ் தலைவர்களை , மார்க்சிஸ்ட் தலைவர்களை , அமீர்கான் போன்றவர்களை ஆபாசமாக , அவதூறாக எழுதுவது , சித்தரிப்பதுதான் இவர்கள் நோக்கம் .

இதற்காக பிரதமர் ஆசியுடன் ஒரு தொழில்நுட்பக்குழு குஜராத்தை சேர்ந்த ஜெயின் என்பவர் தலைமையில் இயங்குகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் கல்யாணராமன் போன்றவர்கள் இயங்குகின்றனர். இவர்களை அம்பலப்படுத்தும் இயக்கம் விரைவில் துவங்கும்.

தற்போது விரிவாக புகார் அளித்துள்ளேன். அதன்மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உயர்நீதிமன்றத்தை நாடி நீதி பெற வேண்டி இருக்கும். இவ்வாறு ஜோதிமணி தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios