டி.டி.வி.தினகரனின் வலது கரமாக பசெயல்பட்டு வந்த தங்க தமிழ்செல்வன் கட்சியை விட்டு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு அடுத்த வலது கரமான முன்னாள் அமைச்சர் ஒருவரும் அதிமுகவில் இணைய உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. 

தங்க.தமிழ்ச்செல்வனை அதிமுகவில் இணைக்க அமைச்சர் தங்கமணி மூலம் எடப்பாடி காய் நகர்த்தி வெற்றி பெற்றார். இந்த அதிர்ச்சியிலிருந்தே மீளாத டி.டி.வி.தினகரனுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுக்க இருக்கிறார் முன்னாள் அமைச்சரான பழனியப்பன். 

இந்நிலையில் அமைச்சர் வேலுமணியை வைத்து எடப்பாடி காய் நகர்த்தி பழனியப்பனை வழிக்கு கொண்டு வந்து விட்டதாகக் கூறப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் அணியிலிருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொத்துக் கொத்தாக விலகி அதிமுக, திமுகவில் இணைந்து வருகின்றனர். டி.டி.வி.தினகரனுக்கு மிக நெருக்கமாக இருந்த தங்க தமிழ்ச்செல்வனை தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் திமுக அல்லது அதிமுகவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரை தடுத்து நிறுத்த என்ன செய்யலாம் என்று கட்சி நிர்வாகிகளிடம் தினகரன் ஆலோசித்து வருவதாக கூறுகின்றனர்.