தஞ்சை பெரிய கோயில் பற்றி ஜோதிகாவுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் மத்திய அமைச்சர்மு.க.அழகிரியும், அவரது மகன் தயா அழகிரியும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 
 
நடிகை ஜோதிகா தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அந்த நிகழ்ச்சியில் தனக்கு வழங்கப்பட்ட வெருதை பெற்றுகொண்டு சிறிது நேரம் பேசிய ஜோதிகா, கோயில்களுக்கு செலவிடும் அதே தொகையை மருத்துவமனைகளுக்கும், பள்ளிகளுக்கும் கொடுங்கள் என பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து, அவரது கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வந்தன. தொடர்ந்து, ஜோதிகாவின் கணவரும், நடிகருமான சூர்யா, அன்பை விதைப்போம் என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவளிப்பதாகவும், அவருடன் எப்போதும் துணை நிற்பதாகவும் கூறியிருந்தார்.

“கோயில்களை போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை, சிலர் குற்றமாக பார்க்கிறார்கள். இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப்பெரியவர்களே சொல்லி இருக்கிறார்கள். மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்குச்செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை. நல்லோர் சிந்தனைகளை படிக்காத காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை”எனவும் சூர்யா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

 

நடிகர் சூர்யாவின் இந்த அறிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் மத்திய அமைச்சரும், கலைஞர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி, சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து ’சிறப்பு’என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்னொரு சிறப்பு அம்சமாக தயா ழகிரியும் சூர்யா- ஜோதிகாவுக்கு ஆதரவு தெரிவித்து பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.