jio phone free for first standard admission

அரசு நிர்ணயித்த பள்ளிக் கட்டணத்தை விட தனியார் பள்ளிக்கள் அதிகமாக வசூலித்து வந்தாலும் மக்களில் பெரும்பாலானவர்கள் தனியாரையே விரும்புகிறார்கள். கடன் பெற்று தனியார் பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்கள்தான் இப்போது அதிகம். தனியார் பள்ளியின் மீதான மக்களின் மோகம் சற்றும் குறைவதாக இல்லை.

தற்போது அரசு பள்ளிகளின் தரம் குறைவாக உள்ளது எனக் கருதி மக்கள் பலர் தனியார் பள்ளிநிறுவனதுக்கே தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் சேர்த்துவருகிறார்கள். இது தவிர சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ என பல்வேறு வகைப்பட்ட பாடத்திட்டங்களில் மக்கள் தங்கள் பிள்ளைகளை சேர்க்க விரும்புகிறார்கள்.

தற்போதைய அரசு பாடத்திட்டதில் மாற்றம் எனப் பலவும் கொண்டுவந்தாலும் மக்கள் அரசுபள்ளிகளில் சேர்ப்பதில் தயக்கம் காட்டி வருகின்றனர். தமிழ் வழிக் கல்வியை மக்கள் பெரும்பாலும் மக்கள் கைவிட்ட நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கவைப்பதற்கு வித்தியாசமான முறைகளை கையாளத் தொடங்கியுள்ளனர்.

புதுவிதமான முயற்சிகளில் ஒன்றாக பொதுவாக மக்களுக்கு இலவசத்தின் மீதுள்ள மோகத்தை இங்கும் பயன்படுத்த விரும்பிய அரசுப் பள்ளி, மதுரை போடிநாயக்கனூரில் அரசுநடுநிலைப்பள்ளி தங்கள் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேரும் ஒவ்வொரு மாணவர்க்கும் ஜூயோ மொபைல் போனை இலவசமாக தருவதாக அறிவித்துள்ளது.