பிரதமர் மோடிக்கு ஜிக்னேஷ் மேவானி முட்டாள்கள் தின வாழ்த்துக்கள் தெரிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அண்மையில் நடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர் ஜிக்னேஷ் மேவானி. தலித்துகள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிய ஜிக்னேஷ் மேவானி, பாஜகவிற்கு எதிராக பேசி தேர்தல் களம் கண்டு வெற்றி பெற்றார்.

பாஜகவிற்கு எதிராக மிகத்தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று, பிரதமர் மோடிக்கு ஜிக்னேஷ் மேவானி முட்டாள்கள் தின வாழ்த்துக்களை கிண்டலாக தெரிவித்துள்ளார். 

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">Narendra modi has taken April fool day to new heights. Actually this day is meant only for him. He will undoubtedly go to history for the jumlas he keeps producing without feeling embarrassment. Our best wishes are always with you, Narendra bhai.</p>&mdash; Jignesh Mevani (@jigneshmevani80) <a href="https://twitter.com/jigneshmevani80/status/980323193826156544?ref_src=twsrc%5Etfw">April 1, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

இதுதொடர்பாக ஜிக்னேஷ் மேவானி டுவிட்டர் பக்கத்தில், நரேந்திரமோடி முட்டாள்கள் தினத்தை புதிய உச்சத்திற்கு தூக்கிச் சென்றவர். சொல்லப்போனால், இன்றைய தினமே அவருக்கானதுதான். கூச்சமேயில்லாமல் தொடர்ந்து பல போலி வாக்குறுதிகளைத் தந்து, அதன்மூலம் அவர் வரலாறு படைப்பார் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம். நரேந்திர பாய்.. எங்களது வாழ்த்துகள் எப்போதுமே உங்களுக்கு உண்டு என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.