சந்திரபாபு நாயுடுவை சுட்டுக் கொல்ல வேண்டும்…ஜெகன் மோகன் ரெட்டியின் பேச்சால் சர்ச்சை…

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு பொது இடத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட வேண்டியவர் என ஒய்.எஸ்.ஆர் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக சந்திர பாபு நாயுடு உள்ளார் அதே நேரத்தில் . பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்திரஸ்  கட்சி உள்ளது.

இம்மாநிலத்தில் நந்தியால் தொகுதிக்கு வரும் 23-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. கர்னூல் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித்  தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி , நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என தெரிவித்தார்.

வாக்காளர்களை ஏமாற்றும் வேலையை தான் சந்திர பாபு நாயுடு செய்து கொண்டிருக்கிறார். எனவே அவரை பொது இடத்தில் வைத்து சுட்டுக்கொல்ல வேண்டும் அவ்வாறு செய்வதால் தவறு ஒன்றுமில்லை என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

ஜெகன்மோகனின் இந்த பேச்சுக்கு தெலுங்கு கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தான் ஒரு அரசியல்வாதி என்பதை மறந்து பேசியதாக ஜெகன் மோகன் மீது கர்னூல் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் கொடுத்துள்ளது.

இதையடுத்து ஜெகன் மோகன் ரெட்டி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது