jaykumar pressmeet about jayakumar

ஜி.எஸ்.டி வரியால் மாநில வரி வருவாய் அதிகரிக்கும் என அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

ஜிஎஸ்டி வரி நடைமுறைப்படுத்துவது குறித்து நிதியமைச்சர் ஜெயகுமார், வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் வணிக வரித்துறை செயலர் சந்திரமவுலி ஆகியோர் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

மாநில நிதி தன்னாட்சியை காப்பாற்ற சில பொருட்கள் மீதான வரியை மாநில அரசு நிர்ணயிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு அதனை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் மத்திய அரசுக்கு ஆதரவு என தெரிவித்துள்ளோம். தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய் விளங்குகிறது.

உலகம் முழுவதும் ஓரே நாடு ஒரே வரி கொள்கை 148 நாடுகளில் நடைமுறையில் உள்ளது. ஜி.எஸ்.டி குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. உற்பத்தி தளத்தில் இருந்து நுகர்வு த தளத்திற்கு வரும் பொருட்கள் மீது பல்வேறு வரிகள் விதிக்கப்படுவது தவிர்க்கப் படுவதால் பொதுமக்கள் பயனடைவர்.

2 கோடி ரூபாய் செலவில் விழிப்புணர்வு மையம் கலைவாணர் அரங்கில் ஏற்படுத்தப் பட்டுள்ளது. உற்பத்தி அதிகரிப்பதோடு, விலைவாசி ஏற்றம் தவிர்க்கப்படும். வணிகர்கள் நலன் பாதுகாக்கப்படுகிறதும்

விருதுநகர் மாவட்ட பிரதான தொழிலான பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு 28 விழுக்காடு வரி விதிப்பு வாழ்வாதார பிரச்சினையை ஏற்படுத்தக் கூடாது என்பதில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளோம்

வாழ்வாதாரப் பிரச்சினை ஏற்பட்டால் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்துவோம். ஆகஸ்ட் முதல் வாரம் சனிக்கிழமை கூடும் GST கூட்டத்தில் இந்த பிரச்சினைகள் குறித்து அழுத்தம் கொடுப்போம். கேளிக்கை வரி குறித்த கோரிக்கைகள் முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளன. அது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜி.எஸ்டி வரி குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்க முடியாது. ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு கோரிக்கைகளை கொண்டு சென்று மத்திய மாநில அரசுகள் இணைந்து திருத்தம் கொண்டு வர வேண்டும். மாநில அரசு வருவாய் மற்றும் மானியம் பாதிக்கப்படாத அளவிற்கு மத்திய அரசு எழுத்துப் பூர்வ உத்திரவாதம் கொடுத்துள்ளனர்.

மதிப்புக் கூட்டு வரி நிலுவை சுமார் 3000 கோடி மத்திய அரசிடம் உள்ளது. அதை 2 மாதங்கக்குள் தருவதாக தெரிவித்து உள்ளனர். ஜி.எஸ்.டி மூலம் தமிழகத்திற்கு வரி வருவாய் அதிகரிக்கவே வாய்ப்பு இருக்கிறது. தற்போது ஜி.எஸ்.டி நிறைவேற்றப் பட்டிருப்பது இழப்பீடு வழங்குவதை சட்டமாக்கி இருக்கிறது. மாநிலத்திற்கு வருவாய் இழப்பு இருக்காது.

ஜி.எஸ்டி குறித்த சந்தேகங்களை 24 மணி நேரமும் இயங்கும் இலவச சேவை மைய எண் 1800 103 6781 ல் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம். நிரந்தர சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் நிறுத்தி ஆவணங்கள் கொடுக்க வேண்டியதில்லை.

ஜி.எஸ்.டி யில் வராத பொருட்களுக்கு பழைய நடைமுறையே பின்பற்றப்படும் . இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.