டிடிவி.தினகரனுக்கு எதிராக ஆர்.கே.நகரில் ஜெயானந்த் மனிதசங்கலி போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக டிடிவி தினகரன் – திவாகரன் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது.  அம்மா அணி என்கிற பெயரில் தனி அமைப்பை திவாகரன் உருவாக்கினார். இதற்கு, சசிகலா தனது வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் மூலம் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், கோபமடைந்த திவாகரன், அவர் தனது சகோதரி இல்லை என்று அறிவித்தார். பின்பு அம்மா அணி என்கிற அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றினார். பின்னர் தினகரனுக்கும்-திவாரகனுக்கு வார்த்தை போர் மூண்டது.  இதனையடுத்து தினகரன் எம்.எல்.ஏ.வாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயானந்த் போராட்டம் நடத்த திட்டமிட்டார். ஐஓசிஎல், சிபிசிஎல் நிறுவனங்கள் மக்கள் வளர்ச்சி பணிகளை ஆர்.கே.நகரில் மேற்கொண்டுள்ளனர். ஆர்.கே.நகரில் முதல் போராட்டம் தொடங்கியுள்ளது. எண்ணெய் நிறுவனங்களுக்கு குழாய் பதிக்க டெண்டர் விடுக்கப்பட்டது. அந்த டெண்டரில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் செயல்படுத்தவில்லை. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. அதனை அரசு விசாரணை நடத்த வேண்டும். பதிக்கப்படும் குழாய்களில் ஏற்படும் எண்ணெய் கசிவால் நிலத்தடி நீர் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் என்றார். நாம் இயற்கை வளம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என ஜெயானந்த் வலியுறுத்தியுள்ளார்.