மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் பிப்ரவரி 24-ம் தேதி கொண்டாப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கேள்வி நேரத்திற்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 3 துறைகள் தொடர்பான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். குறிப்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதியன்று பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று 110-ன் வீதியின் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

மேலும், பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு சமூக பொருளாதார நிலையை கருதி சிறப்பு உதவி தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு 21 வயதாகும்போது ரூ.2 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். 

அதேபோல், ஹஜ் பயணிகள் தங்கி செல்வதற்காக அவர்களுக்கு 15 கோடி ரூபாய் செலவில் புதிய ஹஜ் இல்லம் அமைக்கப்படும். உலமாக்களுக்கு ஓய்வூதியம் ரூ.1500-லிருந்து, ரூ.3000-மாக உயர்த்தப்படுவதாகவும், உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் நிதி ஒதுக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல் அறிவிப்பை வெளியிட்டார்.