மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எவ்வளவு சொத்துக்கள் இருக்கின்றன என்பது குறித்த தகவலை வருமானவரித்துறை துணை ஆணையர் ஷோபா உயர்நீதிமன்றத்தில் பதில் அறிக்கைத் தாக்கல் செய்தார். 

ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை சார்பில் துறை ஆணையர் ஷோபா ஆஜராகி பதில் அறிக்கை தாக்கல் செய்தார். 

அதில்,  2016-2017ஆம் ஆண்டுக்கான வருமானவரித்துறை கணக்குப்படி ஜெயலலிதாவுக்கு ரூ.16.37 கோடி சொத்துகள் உள்ளன.  2016-2017ஆம் ஆண்டுக்கான வருமானவரித்துறை கணக்குப்படி ஜெயலலிதாவுக்கு வங்கியில் ரூ.10 கோடி இருப்பு உள்ளது. 1990-91 முதல் 2011-12 வரையிலான காலகட்டத்தில் ரூ.10.12 கோடி செலவு வரி பாக்கி இருந்தது.

2005-06 நிதியாண்டு முதல் 2011-12 வரை ஜெயலலிதா ரூ.6.62 கோடி வருமானவரி பாக்கி உள்ளது. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம், ஹைதராபாத் வீடு உள்ளிட்ட 4 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை வருகிற ஜூன் மாதம் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.