முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு திருஷ்டி இருப்பதால் இவ்வளவு பிரச்சனைகள் விரைவில் அது நீங்கும் என நடிகை சரோஜா தேவி அப்போலோவில் தெரிவித்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது டல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் கிளம்பினாலும் தற்போது அவர் பூரண குணமடைந்து வருகிறார்.
அவருக்கு லண்டன் மருத்துவர் , எய்ம்ஸ் மருத்துவர் , சிங்கப்பூர் மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சரை காண அவரது நலத்தை விசாரிக்க தமிழகம் முழுதும் இருந்து அனைத்து எதிர்கட்சித்தலைவர்கள் , முக்கிய பிரமுகர்கள் வந்து செல்கின்றனர்.

ஜெயலலிதாவுக்கு அடுத்து எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் நடித்த நடிகை சரோஜா தேவி இன்று அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முதல்வர் உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது.
முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு தைரியமான துணிச்சலான பெண்மணி , அவங்க நல்லா இருக்காங்க. லண்டன் டாக்டரிடம் அவங்க உடல் நலம் குறித்து விசாரித்தேன். நன்றாக இருப்பதாக தெரிவித்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா தனிப்பட்ட முறையில் என்மேல் அன்பு கொண்டவர் , என்னை அவரது இல்லத்துக்கு அழைத்து அவர்கையால் உணவு பறிமாறியுள்ளார். எனக்கு துணிமணிகள் எடுத்து தந்துள்ளார். அந்நியோன்யமாக , அன்பாக பழக கூடியவர்.
தைரியமான பெண்மணி அவர், சாதனைகள் பல படைத்தவர். விரைவில் பூரண நலம் பெற்று வீடுதிரும்புவார். இப்போது அவர் மேல் திருஷ்டி இருக்கிறது. விரைவில் அது நீங்கிவிடும். பூரணமாக குணமடைந்து வருவார். இவ்வாறு சரோஜா தேவி தெரிவித்தார்.
