Jayalalitha life to be cinema
ஜெயலலிதா என்ற ஆளுமை எதிர்ப்பதிலும் உறுதி; அரவணைப்பதிலும் உறுதி; அவருக்கு நிகர் அவராகவே வாழ்ந்து காட்டியவர் அவர்தான். ஜெ.வைப்போல் ஆக வேண்டும் என்ற ஆசை பல பெண்களுக்கு ஆசை எழலாம். ஆனால் ஜெயலலிதாவுக்கு நிகராக யாராலும் ஆக முடியாது என்று பெண்கள் மட்டுமல்ல ஆண்களே போற்றும் ஆளுமை கொண்டவர் ஜெயலலிதா.

1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி, சந்தியா - ஜெயராமன் தம்பதியருக்கு 2-வது குழந்தையாக பிறந்த ஜெயலலிதா, 20 வருடங்கள் அம்மா சந்தியாவிடம் வளர்ந்தார். சினிமா மற்றும் அரசியல் பள்ளியில் எம்.ஜி.ஆரிடம் 20 ஆண்டுகள் கற்றுக் கொண்டார்

ஜெ.வின் ஆரம்பகால அரசியல் வாழ்க்கை குறித்து எழுத்தாளர் வாஸந்தி கூறும்போது, அரசியல் வாழ்வில் சாதனை புரிவதற்கு பல தடைகளை ஆரம்ப காலங்களில் ஜெயலலிதா சந்தித்தார். திராவிட அரசியலின் எதிர்ப்புக்கு ஆளாகி, பிராமண வகுப்பை சேர்ந்த அவர் என கருதப்பட்டது ஆகியவை அவர் சந்தித்த தடைகளாகும்.
![]()
ஆனால், அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரரான தான் சந்தித்த தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி சாதனை புரிந்தவர் ஜெயலலிதா என்கிறார் வாஸந்தி. கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக ஜெயலலிதா காலமானார். அவர் மறைந்து ஒரு வருட காலம் முடிந்துள்ளது. இந்த நிலையில் அவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக தயாரிக்க மும்பை பட நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும், அதிமுகவின் பொது செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை, மும்பையைச் சேர்ந்த பட தயாரிப்பாளர் ஆதித்ய பரத்வாஜ் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான இதற்கு 'தாய் - புரட்சித் தலைவி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட உள்ளது. இந்த படத்திற்காக சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக பல தகவல்களை திரட்டியுள்ளார்களாம் பட குழுவினர்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே அவரிடம், இது பற்றிய தகவலைத் தெரிவித்திருக்கிறார்களாம்.. ஆனால், இது பற்றி பிறகு பேசலாம் என்று ஜெயலலிதா தெரிவித்ததாக தயாரிப்பாளர் ஆதித்ய பரத்வாஜ் கூறுகிறார். படம் பற்றி கூறும்போது, தாய் புரட்சி தலைவியின் பெரும்பான்மையான படப்பிடிப்பு, மும்பை ஸ்டுடியோக்களில் படமாக்கப்பட உள்ளதாக கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் ஆரம்பகால திரையுலக வாழ்க்கை குறித்தவைகள் பற்றி சென்னையில் படமாக்கப்பட உள்ளதாம். ஜெயலலிதாவின் கதாப்பாத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார்கள் என்பது குறித்த எந்த விவரமும் வெளியாகவில்லை. இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்று பட நிறுவனம் கூறியுள்ளது. தாய் - புரட்சித் தலைவியின் படப்பிடிப்பு 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கடைசியில் ஆரம்பமாக உள்ளதாக பட நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைக் கருத்துகள் எழுந்து வருகிறது. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது, அமைச்சர்கள், ஆளுநர், மத்திய அமைச்சர்கள் என யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், மருத்துவமனையில் நடந்த விஷயங்கள், தாய் - புரட்சித் தலைவி படத்தில் இடம் பெறுமா? அவரின் மரணம் குறித்த சர்ச்சை தொடர்பாக இந்த படத்தின் மூலம் விளக்கம் கிடைக்குமா? உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களை இந்த படம் தீர்க்குமா? என்பது படம் வெளியான பிறகே தெரியும்... அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும்.
