Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் மோடி மனசு வைத்திருந்தால் ஜெயலலிதா உயிரை காப்பாற்றி இருக்க முடியும்.. பாஜகவை அலறிவிடும் கே.எஸ்.அழகிரி

ஜெயலலிதா மரண விவகாரம் குறித்து தமிழக சட்டப்பேரவயைில் கடந்த வாரம் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் சசிகலா, கே.எஸ். சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகிய நான்கு பேர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 
 
Jayalalitha life could have been saved if PM Modi had a mind... ks alagiri
Author
First Published Oct 25, 2022, 2:40 PM IST

ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துறை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி  கூறியுள்ளார்.   

ஜெயலலிதா மரண விவகாரம் குறித்து தமிழக சட்டப்பேரவயைில் கடந்த வாரம் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் சசிகலா, கே.எஸ். சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகிய நான்கு பேர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 

இதையும் படிங்க;- எங்கள் சித்தியை காப்பாற்றுவதற்காக நான் இதை கூறவில்லை.. ஆறுமுகசாமி அறிக்கை இப்படித்தான் இருக்கிறது.. டிடிவி.!

Jayalalitha life could have been saved if PM Modi had a mind... ks alagiri

இது தொடர்பாக சட்டம் மற்றும் மருத்துவ துறை ஆலோசனைகளை தமிழக அரசு கேட்டு வருகிறது. ஆறுமுகசாமி ஆணையம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்றும், ஆறுமுகசாமியின் அறிக்கை அரசியல்வாதியின் அறிக்கை போல் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டுக்களை சசிகலா, விஜயபாஸ்கர் ஏற்கனவே மறுத்துள்ளனர். 

Jayalalitha life could have been saved if PM Modi had a mind... ks alagiri

இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையம் குறித்து கே.எஸ்.அழகிரி கூறியுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்கை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துறை. எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை சரியில்லாதபோது, ​​அவரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல மருத்துவ வசதியுடன் கூடிய விமானத்தை ஏற்பாடு செய்தார் இந்திரா காந்தி. இதனால்தான் எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார்.

Jayalalitha life could have been saved if PM Modi had a mind... ks alagiri

அதேபோல், பிரதமரோ அல்லது மாநில அரசில் உள்ள அமைச்சர்களோ ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மோடி செயல்பட்டிருந்தால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-  மடியில் கனமில்லலை..! ஆறுமுகசாமி ஆணைய குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன்- விஜயபாஸ்கர்

Follow Us:
Download App:
  • android
  • ios