முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஒரு வாரத்துக்கு எவ்வித விசாரணையும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவு தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆணையம் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகிறது. ஜெயலலிதாவிற்கு நெருக்கமானவர்கள், ஜெயலலிதாவுடன் வசித்தவர்கள், அவரது உதவியாளர்கள், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என அனைவரிடமும் விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

முன்னாள் தலைமை செயலாளர்கள் ராம மோகன ராவ், ஷீலா பாலகிருஷ்ணன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தீபாவின் கணவர் மாதவன், தீபாவின் சகோதரர் தீபக், திமுகவைச் சேர்ந்த சரவணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளது. இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா, தினகரன் சார்பில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். ஜெயலலிதாவின்
பாதுகாவலராக இருந்த பெருமாள்சாமி, விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். 

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைத்து 6 மாதங்கள் ஆகும் நிலையில், இதுவரை 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், விசாரணை ஆணையத்தில் அடுத்த ஒரு வாரத்துக்க எவ்வித விசாரணையும் நடைபெறாது என்றும், இடைப்பட்ட காலத்தில் விசாரிப்பதற்காக அனுப்பப்பட்ட சம்மன்கள் ஒத்திவைக்கப்படுவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பன்கள் மீது மார்ச் 6 ஆம் தேதி முதல் விசாரணை நடத்தப்படும் என்று ஆணையம் த