- Home
- Tamil Nadu News
- நாங்க கேட்ட தொகுதிகளை கொடுக்கணும்.. இல்லனா.. NDA கூட்டணி கட்சி அதிரடி.. பாஜக ஷாக்!
நாங்க கேட்ட தொகுதிகளை கொடுக்கணும்.. இல்லனா.. NDA கூட்டணி கட்சி அதிரடி.. பாஜக ஷாக்!
'பியூஸ் கோயல் தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தை இனிதாக நடைபெற்றது. நாங்கள் 10 தொகுதிகள் வரை கேட்டுள்ளோம். 10 தொகுதிகல் அடங்கிய பட்டியலை அளித்துள்ளோம்.

சூடுபிடித்த தமிழக அரசியல் களம்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக, பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து பலம் பெற்று வருகிறது. அதாவது அன்புமணி தரப்பு பாமக NDA கூட்டணியில் இணைந்துள்ளது. இதேபோல் எடப்பாடி பழனிசாமி மீதான கோபத்தில் வெளியேறி சென்ற டிடிவி தினகரனின் அமமுகவை பாஜக வெற்றிகரமாக கூட்டணிக்குள் கொண்டு வந்துள்ளது.
பியூஸ் கோயலை சந்தித்த ஜான் பாண்டியன்
மேலும் பிரேமலதா விஜயகாந்தின் தேமுதிகவும் என்டிஏ கூட்டணியில் இணையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஏற்கெனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளது.
இந்த நிலையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் மத்திய அமைச்சரும், தமிழக தேர்தலுக்கான பாஜகவின் மேலிட பொறுப்பாளருமான பியூஸ் கோயலை இன்று (ஜனவரி 22) சந்தித்து பேசினார்.
10 தொகுதிகள் கேட்டுள்ளோம்
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஜான் பாண்டியன், ''பியூஸ் கோயல் தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தை இனிதாக நடைபெற்றது. நாங்கள் 10 தொகுதிகள் வரை கேட்டுள்ளோம். 10 தொகுதிகல் அடங்கிய பட்டியலை அளித்துள்ளோம்.
இது குறித்து பேசுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும் என்று நம்புகிறோம். நாங்கள் வெற்றி பெறக்கூடிய தொகுதிகளின் பட்டியலை தான் கொடுத்திருக்கிறோம்.
நாங்க கேட்ட தொகுதிகளை கொடுக்கணும்
நாங்கள் கேட்கும் தொகுதிகளைத் தான் நீங்கள் கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் தொகுதிகளில் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்று தெளிவாக கூறி விட்டோம். ஆகவே நாங்கள் கேட்கும் தொகுதிகளை கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி தான். அவரை கண்டிப்பாக சந்தித்து பேசுவேன். கூட்டணி ஆட்சி குறித்து இப்போது சிந்திக்கவே இல்லை. இப்போது வெற்றியை நோக்கி தான் பயணம் செய்கிறோம்.
ராமதாஸும், அன்புணியும் ஒன்னு சேரணும்
ராமதாஸும், அன்புமணியும் சமாதானமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதன் அடிப்படையில் தான் அவர்களிடம் பேசுவேன் என்று சொன்னேன்.
ராமதாஸ் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருகிறாரா? என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். நாளை மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கண்டிப்பாக கலந்து கொள்வேன்'' என்று தெரிவித்தார்.

