MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கட்சி ஏஜெண்டாக மாறிய ஆளுநர்கள்.. ஒரே தீர்வு இதுதான்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி!

கட்சி ஏஜெண்டாக மாறிய ஆளுநர்கள்.. ஒரே தீர்வு இதுதான்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி!

மாநில அரசுகளால் தயாரிக்கப்பட்ட உரையைப் படிக்க ஆளுநர்கள் மறுத்து, கட்சி முகவர்களைப் போல நடந்துகொண்டு, முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைப் பலவீனப்படுத்துகின்றனர் என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

1 Min read
Author : Rayar r
Published : Jan 22 2026, 06:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
உரையை படிக்காமல் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி
Image Credit : our own

உரையை படிக்காமல் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக சட்டப்பேரவையில் தனது உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இதேபோல் கேரள சட்டப்பேரவையில் மாநில அரசு எழுதிக் கொடுத்த உரையில் மத்திய அரசுக்கு எதிரான வாசக‌ங்களை அந்த மாநில ஆளுநர் தவிர்த்தார். மேலும் கர்நாடக சட்டப்பேரவையிலும் அந்த மாநில ஆளுநர் உரையை படிக்காமல் வெளியேறினார்.

23
கட்சி ஏஜெண்டாக மாறி விட்ட ஆளுநர்கள்
Image Credit : Google

கட்சி ஏஜெண்டாக மாறி விட்ட ஆளுநர்கள்

இந்த நிலையில், ஆளுநர்கள் கட்சி ஏஜெண்டாக மாறி விட்டதாகவும் சட்டமன்றக் கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இதற்கு ஒரே தீர்வு என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், ''முதலில் தமிழ்நாடு. பிறகு கேரளா. இப்போது கர்நாடகா. இந்த முறைமை தெளிவாகவும் திட்டமிட்டபடியும் உள்ளது.

ஒரே தீர்வு இதுதான்

மாநில அரசுகளால் தயாரிக்கப்பட்ட உரையைப் படிக்க ஆளுநர்கள் மறுத்து, கட்சி முகவர்களைப் போல நடந்துகொண்டு, முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைப் பலவீனப்படுத்துகின்றனர். நான் முன்பே குறிப்பிட்டது போல, ஆண்டுதோறும் நடைபெறும் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இப்போது ஒரே தீர்வு.

Related Articles

Related image1
கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா? கமலாலயத்தில் ஒரு மூலையில் உட்காருங்க.. ஆளுநரை கடுமையாக விமர்சித்த திமுக!
Related image2
ஒரே பொய் பொய்யா எழுதி கொடுப்பீங்க, நான் வாசிக்கனுமா..? உரையை புறக்கணித்தது ஏன்..? ஆளுநர் விளக்கம்
33
திமுக முயற்சி எடுக்கும்
Image Credit : Asianet News

திமுக முயற்சி எடுக்கும்

இந்தியா முழுவதும் உள்ள ஒத்த எண்ணம் கொண்ட எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்து, இந்த வழக்கற்றுப் போன மற்றும் பொருத்தமற்ற நடைமுறையை ஒழிப்பதற்காக, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே ஒரு அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர திமுக முயற்சிக்கும்'' என்று கூறியுள்ளார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மு. க. ஸ்டாலின்
ஆளுநர் ஆர்.என். ரவி
தமிழ்நாடு
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சார் சும்மா மாத்தி மாத்தி பேசாதீங்க.. த.வெ.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை? டென்ஷனான செல்வப்பெருந்தகை
Recommended image2
மழை வருமா? வெயில் சுட்டெரிக்கப் போகுதா? வானிலை மையம் லேட்டஸ் அப்டேட்
Recommended image3
அப்ப நைனார் சொல்லும் போது குதிச்சிங்க! விஜயின் மனைவி சங்கீதா குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?
Related Stories
Recommended image1
கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா? கமலாலயத்தில் ஒரு மூலையில் உட்காருங்க.. ஆளுநரை கடுமையாக விமர்சித்த திமுக!
Recommended image2
ஒரே பொய் பொய்யா எழுதி கொடுப்பீங்க, நான் வாசிக்கனுமா..? உரையை புறக்கணித்தது ஏன்..? ஆளுநர் விளக்கம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved