MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இனி நாடே விசில் போடும்.. மக்கள் சின்னம் விசில்.. வெற்றி ஆரம்பம்.. தளபதி விஜய் ஹேப்பி.. தவெக குஷி!

இனி நாடே விசில் போடும்.. மக்கள் சின்னம் விசில்.. வெற்றி ஆரம்பம்.. தளபதி விஜய் ஹேப்பி.. தவெக குஷி!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். 

2 Min read
Author : Rayar A
Published : Jan 22 2026, 07:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விஜய் கட்சிக்கு விசில் சின்னம்
Image Credit : Asianet News

விஜய் கட்சிக்கு விசில் சின்னம்

நடிகர் விஜய்யின் தவெக கட்சிக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் பொது சின்னமாக விசில் சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதனால் தவெகவினர் குஷியடைந்துள்ள நிலையில், இதற்காக தேர்தல் ஆணையத்துக்கு நன்றி சொன்ன தவெக தலைவர் விஜய், ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
முதல் வெற்றி அத்தியாயம்
Image Credit : Asianet News

முதல் வெற்றி அத்தியாயம்

இது தொடர்பாக விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.

தேர்தல் ஆணையத்துக்கு நன்றி

இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில். தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். இதற்காகத் தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

34
பாதுகாப்பின் அடையாளம் விசில்
Image Credit : Asianet News

பாதுகாப்பின் அடையாளம் விசில்

விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி. ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம்.

இயற்கையும் இறைவனும் அளித்த பரிசு

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு.

44
மக்கள் சின்னம் விசில்; நல்லவர்கள் சின்னம் விசில்
Image Credit : x

மக்கள் சின்னம் விசில்; நல்லவர்கள் சின்னம் விசில்

நமது சின்னம் விசில்.

நல்லவர்கள் சின்னம் விசில்.

நாடு காப்பவர்கள் சின்னம் விசில்.

ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில்.

ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில்.

வெற்றிச் சின்னம் விசில். வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். விசில் போடுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டிவி.கே. விஜய்
தமிழ்நாடு
தேர்தல்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
Recommended image2
Now Playing
மதுரைக்கு புதிய விமானங்கள் வரவேண்டும்..! மதுரையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி
Recommended image3
Now Playing
வரலாற்று சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் !
Related Stories
Recommended image1
விசில் போடு.. தவெக தேர்தல் சின்னம் இதுதான்.. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Recommended image2
விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்.. இப்போதைக்கு வாய்ப்பில்லை ராஜா.. உயர்நீதிமன்றம் கொடுத்த ஷாக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved