- Home
- Tamil Nadu News
- விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்.. இப்போதைக்கு வாய்ப்பில்லை ராஜா.. உயர்நீதிமன்றம் கொடுத்த ஷாக்!
விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்.. இப்போதைக்கு வாய்ப்பில்லை ராஜா.. உயர்நீதிமன்றம் கொடுத்த ஷாக்!
பட தயாரிப்பு நிறுவனமும், தணிக்கை வாரியமும் தங்கள் தரப்பு வாதங்களை தலா அரை மணி நேரத்தில் முடிக்க வேண்டும் என நீதிபதிகள் கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் இரு தரப்புமும் நீண்ட நேரம் வாதங்களை முன்வைத்தனர்.

ஜனநாயகன் தீர்ப்பு ஒத்திவைப்பு
நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனுக்கு சென்சார் சர்டிபிகேட் வழங்காதது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 20) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது பட தயாரிப்பு நிறுவனமும், தணிக்கை வாரியமும் தங்கள் தரப்பு வாதங்களை காரசாரமாக முன்வைத்திருந்தன. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ஜனநாயகன் வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.
விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்
இந்த வழக்கில் இன்றே தீர்ப்பு வழங்கப்படும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தீர்ப்பை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. முன்னதாக பட தயாரிப்பு நிறுவனமும், தணிக்கை வாரியமும் தங்கள் தரப்பு வாதங்களை தலா அரை மணி நேரத்தில் முடிக்க வேண்டும் என நீதிபதிகள் கேட்டுக் கொண்டிருந்தனர்.
ஆனால் இரு தரப்புமும் நீண்ட நேரம் வாதங்களை முன்வைத்தனர். இரு தரப்பும் வாதங்களை முன்பே முடித்திருந்தால் இன்றே தீர்ப்பு வழங்கியிருப்போம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

