jayalalitha daughter problem
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகளாக தன்னை அறிவிக்க வேண்டும் என்றும், அதனை நிருபிக்கும் வகையில் ஜெ,வின் உடலை தோண்டி எடுத்து டி.என்.ஏ. பர்சோதனை நடத்த உத்தரவிட வேண்டம் என கோரி பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் உச்சநிதமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருதா உச்சநிதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், நான் தான் ஜெயலலிதாவின் மகள் என்றும் இதனை நிரூபிப்பதற்காக எனக்கு டிஎம்ஏ பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்

ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து, டிஎன்ஏ சோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ள மஞ்சுளா, ஜெயலலிதாவின் உடலுக்கு வைஷ்ணவ ஐயங்கார் முறைப்படி இறுதிச்சடங்கு நடத்தப்படவில்லை என்பதால் . வைஷ்ணவ ஐயங்கார் முறைப்படி அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அஞ்சுளா என்ற அம்ருத் தனது மனுவில் கூறியுள்ளார்.
மேலும் அந்த மனுவில் 1980 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ம் தேதி ஜெயலலிதாவின் மகளாக பிறந்தேன். ஜெயலலிதாவின் அத்தை ஜெயலட்சுமி தான் பிரசவம் பார்த்தார். ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதற்காக இந்த உண்மை வெளிப்படுத்தப்படவில்லை என கூறியுள்ளார்.

எனது வளர்ப்பு தாயான ஜெயலலிதாவின் சகோதரி ஷைலஜா 2015 ம் ஆண்டு இறந்து விட்டார். வளர்ப்பு தந்தையான சாரதி இந்த ஆண்டு மார்ச் 20 ம் தேதி இறந்து விட்டார். இவ்வாறு அம்ருதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் மகள் எனக்கூறி ஏற்கனவே ஒரு பெண் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ள நிலையில் ஜெ., மகள் என உரிமை கோரி அம்ருதா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
