தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு நடிகர் கமல் ஹாசன் குரல் கொடுத்துள்ளாரா என நிதியமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் கமல் ஹாசன், கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இதனையடுத்து, நடிகர் கமல் மீது, தமிழக அமைச்சர்கள் விமர்சனங்களை கூறி வருகின்றனர்.இந்த நிலையில், நிதியமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு நடிகர் கமல் ஹாசன் குரல் கொடுத்துள்ளாரா? என கேள்வி எழுப்பினார். அரசியலுக்கு வருவேன் என்று கூறாமல் வந்து பார்க்க வேண்டும் என்றார்.

அரசியல் என்பது முள்படுக்கை என்பது வந்து பார்த்தால்தான் தெரியும் என்றார். தமிழர் நலனுக்காக ஒரு துரும்பைக்கூட கமல்ஹாசன் கிள்ளிப்போட்டது இல்லை என்றும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். அரசியலுக்கு வருவதாக நடிகர் கமல்ஹாசன் பாவலா காட்டக்கூடாது என்றார்.

1976 ஆம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டு காரணமாக திமுக ஆட்சி கலைக்கப்பட்டது குறித்து கமல் கருத்து தெரிவிக்காதது ஏன்? என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.]