Asianet News TamilAsianet News Tamil

எனக்கு 32 பல்லு இருக்கு.. அமைச்சர் எ.வ. வேலுக்கு பல்லு இருக்கான்னு தெரியல.. பங்கமாய் கலாய்க்கும் ஜெயக்குமார்.!

பண்ருட்டி ராமச்சந்திரன் மீது நிறைய மரியாதை உள்ளது. அதனால் அவரை கடுமையாக நான் விமர்சனம் செய்யவில்லை. அதிமுக தான் அவரை அடையாளம் காட்டியது. ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தார். நான் அதிமுகவிற்கு விசுவாசமாக இருக்கிறேன் என்றால் என்னை அடையாளம் காட்டியுள்ளது.

jayakumar slams minister EV Velu
Author
First Published Dec 26, 2022, 2:02 PM IST

அதிமுக இணைப்பு குறித்த பேச்சு வார்த்தை நடைபெறுகிறது என்று சசிகலா கூறுவது ஜமுக்காலத்தில் வடிகட்டிய பொய் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

சென்னை காசிமேட்டில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்;- இந்த விடியா அரசு எந்த இயற்கை இடர்பாடுகளுக்கும் மக்களுக்கு நன்மை செய்யவில்லை. மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 15 நாட்கள் கடந்தும் எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. கமிஷன், கரெப்ஷன், கலெக்சன் மட்டுமே திமுக குறியாக உள்ளது. ஓபிஎஸ் ஒரு டம்மி அவர் ஒரிஜினல் கிடையாது. 

இதையும் படிங்க;- அதிமுகவை ஒன்றிணைப்பது இருக்கட்டும்! முதல்ல அவங்க குடும்பம் ஒன்றிணையட்டும்! டிடிவி.யை விமர்சித்த பாலசுந்தரம்.!

jayakumar slams minister EV Velu

பண்ருட்டி ராமச்சந்திரன் மீது நிறைய மரியாதை உள்ளது. அதனால் அவரை கடுமையாக நான் விமர்சனம் செய்யவில்லை. அதிமுக தான் அவரை அடையாளம் காட்டியது. ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தார். நான் அதிமுகவிற்கு விசுவாசமாக இருக்கிறேன் என்றால் என்னை அடையாளம் காட்டியுள்ளது. என் உடம்பில் ஓடும் ரத்தம், உடம்பில் உள்ள உப்பு அனைத்தும் அதிமுக கொடுத்தது. நான் அவரிடம் தயவு செய்து கேட்டுக் கொள்கிறேன். அதிமுகவை சிறுமைப்படுத்தாதீர்கள். பண்ருட்டி ராமச்சந்திரனை  திமுக வின் பி டீமாக பார்க்கிறேன்.

jayakumar slams minister EV Velu

அதிமுகவை இணைக்க பேச்சு வார்த்தை நடைபெறுவதாக கூறிய சசிகலாவின் கருத்திற்கு அது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யின் ஒரு உருவமாய் இருப்பவர் தான் சசிகலா என்றும் விமர்சித்துள்ளார். பொங்கல் தொகுப்பில் செங்கரும்பை கொள்முதல் செய்யாதது விவசாயிகளுக்கு ஏமாற்றம் அடைந்துள்ளனர். பொங்கல் இல்லாத கரும்பு உண்டா என கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது பொங்கல் தொகுப்பில் 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்தார். இப்பொழுது ஆட்சியில் இருக்கும் போது 1000 ரூபாய் தான் கொடுக்கிறார். அதிமுக ஆட்சியில் 2 கோடி ரேஷன் அட்டை காரர்களுக்கு வழங்கினோம். பொங்கல்  தொகுப்பு குறித்து மூத்த அமைச்சர் எ.வ. வேலுவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார். நிர்வாகத் திறமையற்ற அரசு நடைபெறுகிறது என்பதற்கு இந்த ஒப்புதல் வாக்குமூலமே உதாரணம். 

jayakumar slams minister EV Velu

அரசாங்கம் ஒரு பொருளை கொள்முதல் செய்கிறது என்றால் அதன் தரத்தை உறுதி செய்வதுதான் அரசாங்கத்தின் வேலை என்றார். கொள்முதல் செய்யப்படும் நிறுவனங்களில் உரிய பரிசோதனை செய்த பின்னர் பொருட்களை பொதுமக்களுக்கு கொடுத்தால் ஏன் குறை சொல்ல போகிறார்கள். நிர்வாக திறமை இல்லாத அரசு என்ற ஒப்புதல் வாக்குமூலமாக தான்  எ.வ வேலு பேட்டியை பார்க்கிறேன். பொங்கலை நம்பி கரும்பு விளைவித்த விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் திமுகவின் தோழமைக் கட்சிகளே கரும்பை விநியோகம் செய்யாததற்கு அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

jayakumar slams minister EV Velu

கரும்பு இல்லாத பொங்கல் உண்டா என்று கூறிய ஜெயக்குமார் எனக்கு 32 பல்லு இருக்கு எ.வ.வேலுக்கு  பல் இருக்கா இல்லையா என்பது தெரியவில்லை  அதனால்தான் பொங்கல் தொகுப்பில் கரும்பு  வேண்டாம் என்று சொல்லி விட்டார் போல. ஒரே வரியில் சொல்லப்போனால் யானை பசிக்கு சோளப்பொறி என்பதுதான் விடிய அரசின் பொங்கல் தொகுப்பு என ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

இதையும் படிங்க;- 18 மாதத்தில் எத்தனை பேருக்கு வேலை வழக்குனீங்க! வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?ஸ்டாலினை சீண்டும் ஆர்பி.உதயகுமார்

Follow Us:
Download App:
  • android
  • ios