அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைகிறார்களா.? கம்பி கட்டும் கதை எல்லாம் அப்பாவு சொல்கிறார்- ஜெயக்குமார் பதிலடி

பல்கலைகழக துணை வேந்தராக முதலமைச்சர் இருக்க வேண்டும் என்று அப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொன்ன போது ஏன் எதிர்த்தீர்கள், ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவது போல் உள்ளது என முதலமைச்சர் ஸ்டாலினை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார். 
 

Jayakumar said that Appavu claim that AIADMK MLA had joined DMK was wrong KAK

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கழக பொதுச் செயலாளர் தலைமையில் உறுதியான அஸ்திவாரம் பூத் கமிட்டி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை கூட்டம் நடைபெற்றது. கழகத்திற்கு அஸ்திவாரம் சிறந்த தளமாக அமைய வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டு விரைந்து முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக அரசு மேல் மக்களுக்கு கடுமையான அதிருப்தி உள்ளது. தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை,

Jayakumar said that Appavu claim that AIADMK MLA had joined DMK was wrong KAK

விலை வாசி உயர்வு, மின்சார கட்டண உயர்வு அனைத்து பிரச்சாரத்தில் பேசப்படும். எனவும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாக சொன்னால் தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள், எங்கள் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட எத்தனையோ திட்டங்களை சொல்லி பிரச்சாரத்தில் பேசுவோம் என தெரிவித்தார். முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் விசாரிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்தது குறித்த கேள்விக்கு, நீதிமன்றம் என்று உள்ளது அதன் மூலம் நிரபராதி யார் என்று நிரூபிப்பார்கள் என தெரிவித்தார். மேலும்  முரண்பாடுடைய மொத்த உருவமாக திமுக கூட்டணி உள்ளது எப்போது வேண்டுமானாலும் கழன்று வருவார்கள். தேர்தல் நெருங்கும் போது எங்களுடன் யார் கூட்டணியில் இருப்பார்கள் திமுகவிலிருந்து யார் களன்று போவார்கள் என்று தெரியும் என்றார். 

Jayakumar said that Appavu claim that AIADMK MLA had joined DMK was wrong KAK

மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டி முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதற்கு, பல்கலைகழக துணை வேந்தராக முதலமைச்சர் இருக்க வேண்டும் என்று அப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொன்ன போது ஏன் எதிர்த்தீர்கள், ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவது போல் உள்ளது. சட்டசபையில் பொதுக் கூட்டங்களில் தரக் குறைவாக பேசி விட்டு இப்போது பாசாங்கு நடிப்பு காட்டுகிறார்கள் என்றார். நமக்கு வாய்த்த அடிமைகள் திறமைசாலிகள், வாய் தான் காது வரை உள்ளது என்பது போல் கூறினார். 

Jayakumar said that Appavu claim that AIADMK MLA had joined DMK was wrong KAK

சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவில் இணைய முற்பட்டது குறித்து பேசியதற்கு, ஒரு சதவீதம் கூட உண்மை இல்லாத விசியத்தை கம்பி கட்டும் கதை எல்லாம் பேரவை தலைவர் சொல்லி வருகிறார். அவரை அமைச்சராக ஆக்குகிறார்களோ இல்லையோ அது அவர்கள் முடிவு ஆனால் அதற்காக தான் பேசி வருகிறார். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பேசியவர் ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது அது தான் இப்படி பேசி வருவதாக ஜெயக்குமார் கூறினார்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios