துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, பெரியகுளம் நகர் மன்றத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.  இந்நிலையில்,  மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் பதவிக்கு ஓ.ராஜா நேற்று காலை தேர்வு செய்யப்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரத்திலேயே  கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்” என்று ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிக்கை விட்டனர்.

நீக்கம் குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக என்பது மிகப்பெரிய இயக்கம். கட்டுக்கோப்பான இந்த இயக்கத்தில் கழக விரோத நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்கள்தான். இதில் அண்ணன் - தம்பி உறவுக்கு இடமில்லை, தவறு, தவறுதான். தற்போது ஆரம்பமாகியுள்ளது. யார் தவறு செய்தாலும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று முதல்வரும், துணை முதல்வரும் உணர்த்தியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

ஓ.ராஜா என்ன தவறு செய்தார் என்னும் கேள்விக்கு, “கட்சி விரோத நடவடிக்கைகள் குறித்து வெளியில் சொல்ல முடியாது. தம்பி என்றும் பாராமல் பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கக்கூடியது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாதது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு” என்று பதிலளித்தார். மேலும், அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே என்ற பாடலையும் அமைச்சர் பாடிக் காட்டினார்.