Asianet News TamilAsianet News Tamil

"புறம்போக்கு"ன்னு சொன்னால் கோபம் வருமா? வராதா? வித்தியாசமா விளக்கம் கொடுக்கும் ஜெயகுமார்...

jayakumar reply auditor impotent explain
jayakumar reply auditor impotent explain
Author
First Published Dec 27, 2017, 11:32 AM IST


“புறம்போக்கு” நிலம் என்பதை புறம்போக்கு என தனியாக சொன்னால் கோபம் வருமா? வராதா? ஆடிட்டர் குருமூர்த்தியின் ஆங்கில அர்த்தத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆடிட்டர் குருமூர்த்தி முதல்வர், துணை முதல்வரை impotent  என கூறி பேசியதை அமைச்சர் ஜெயக்குமார் “impotent” என்ற வார்த்தையை அவர் எப்படி சொல்லலாம்? நாங்கள் ஆண்மை இல்லாதவர்களா? யாருக்கு ஆண்மை இல்லையோ அவர்களே மற்றவர்களை பார்த்து ஆண்மை இல்லை என்பார்கள். முதலில் குருமூர்த்திக்கு ஆண்மை இருக்கிறதா என செக் பண்ணி பார்க்கட்டும் என பதிலடி கொடுத்தார்.

அமைச்சரின் இந்த பேட்டியை அடுத்து ஆடிட்டர் “impotent”  என்ற வார்த்தையின் அர்த்தத்தை விளக்கமாக தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். நான் பேசியதன் அர்த்தம் புரியாமல் என்னை அவதூறாக அமைச்சர் பேசிய தெருப் பேச்சுக்கு நான் பதில் தெருப்பேச்சில் நான் ஈடுபட்டால் தான் நான் அவர் கூறிய பட்டதுக்கு ஏற்றவனாவேன் என அமைச்சருக்கு விளக்கமளித்தார்.

இந்நிலையில், இன்று காலை பட்டினபாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் ஆடிட்டரின் இந்த விளக்கத்துக்கு பதிலளித்த அவர்; “புறம்போக்கு” நிலம் என்பதை புறம்போக்கு என தனியாக சொன்னால் கோபம் வருமா? வராதா? என்றும் ஆடிட்டர் குருமூர்த்திக்கு பத்திரிகையாளர் என்ற பண்பு இருக்கும் என நம்புகிறேன் என்று தனது பேட்டியில் வித்தியாசமாக பதிலடி கொடுத்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios