jayakumar pressmeet about srilankan law

மீனவர் நலனை காக்க தமிழக அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜாதி ஒழிப்பு போராளி ரெட்டை மலை சீனிவாசன் 158வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிண்டியில் உள்ள அவரது மணி மண்டபத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

ரெட்டை மலை சீனிவாசனின் திருவுருவப்படத்துக்கு அமைச்சர்கள் ஜெயகுமார், பெஞ்சமின், கடம்பூர் ராஜி, எம்பி ஜெயவர்த்தனே, இந்திய குடியரசு கட்சி தலைவர் தனியரசு, இரட்டை மலை சீனிவாசனின் பேத்தி நிர்மலா உள்பட அதிமுகவினர் ஏராளமானோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், அமைச்சர் ஜெயகுமார், செய்தியார்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு, மீனவர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. மீனவர்கள் எல்லை தாண்டினால் அபராதம் விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. அதுபற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை தமிழக அரசுக்கு கிடைக்கவில்லை. மீனவர் நலனை காக்க தமிழக அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தும்.

திரைப்பட துறையினரின் கோரிக்கை தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர், திரைப்படத்துறையினரின் கோரிக்கைகள் குறித்த அறிக்கையை விரைவில் அரசிடம் சமர்ப்பிப்பார்கள்.