டெல்லியில் நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், வரி குறைப்பு தொடர்பான கோரிக்கைகள் முன் வைக்கப்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த வரி விதிப்புக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்த நிலையில், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை மக்களுக்கு சுகம் அல்ல, சுமைதான் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

வரிகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டு ஒரே வரியாக வருவதால் உற்பத்தி விலை தானாகவே குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று டெல்லியில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வரி குறைப்பு தொடர்பான கோரிக்கைகள் முன் வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஜி.எஸ்.டி. வரி குறைப்பு தொடர்பாக பெறப்பட்டுள்ள 60 மனுக்களில் உள்ள கருத்துகளை இந்த கவுன்சில் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட உள்ளது.

தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வரி குறைப்பு தொடர்பான கோரிக்கைகள் முன் வைக்கப்படும என்று கூறினார்.