ஜெயலலிதாவே தோற்ற விஷயத்தில் எடப்பாடி ஜெயித்துடுவாரா என்ன?: ஓவர் வாய் அதிகாரிகளின் ஓப்பன் கமெண்ட்.
அ.தி.மு.க. ஆட்சியை ‘கமிஷன்! கலெக்ஷன்! கரப்ஷன்!’ என்று பஞ்ச் டயலாக் அடித்து பயங்கரமாய் சீண்டிக் கொண்டிருக்கிறது தி.மு.க. மாநிலமெங்கும் வீதிக்கு வீதி கூட்டம் போட்டு தாறுமாறாக வகுந்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் பொறுமையிழந்து, எரிச்சலின் உச்சத்துக்கே சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ’கடந்த தி.மு.க ஆட்சியில் நடந்த ஊழல்களை தோண்டியெடுத்து அம்பலப்படுத்துவோம்.’ என்று கர்ஜித்தார். அத்தோடு விடவில்லை மறுநாளில் இருந்தே அதற்கான வேலைகளையும் ஆரம்பிக்க உத்தரவிட்டார். இந்த பணிக்கு அமைச்சர் ஜெயக்குமாரை பொறுப்பாளராக நியமித்து அன் அபீஷியலாக உத்தரவே இட்டார் முதல்வர்.
ஜெயக்குமாரோ ‘பொத்தாம் பொதுவாக அத்தனை துறைகளையும் தோண்டி எடுப்பதை விட, ஸ்டாலின் பதவி வகித்த உள்ளாட்சி துறையில் கடந்த தி.மு.க. ஆட்சியில் ஏதேனும் முறைகேடுகள் நடந்திருக்குதான்னு கிண்டிப்பார்த்து எனக்கு ரிப்போர்ட் கொடுங்க. அதேநேரத்துல ஸ்டாலின் மற்றும் மா.சுப்பிரமணியம் சென்னை மேயரா இருந்த காலத்துல அனுமதிக்கப்பட்ட டெண்டர்கள், அப்பாயிண்ட்மெண்டுகள் உள்ளிட்ட அத்தனையையும் அலசி ஆராய்ங்க.

உள்ளாட்சி துறை, சென்னை மாநகராட்சி ரெண்டு துறைகளிலும் சின்ன ஊழல் புள்ளி கிடைச்சாலும் என் மேஜைக்கு கொண்டு வந்து வையுங்க.” என்று விரட்டி எடுத்திருக்கிறார் அலுவலர்களை.
இந்த தகவலை அப்படியே ஸ்மெல் செய்துவிட்டது ஸ்டாலின் வட்டாரம். அது எப்படி? என்று கேட்பீர்களேயானால்...ஏற்கனவே நமது ஏஸியாநெட் தமிழ் இணையதளம் ஒரு ரகசிய தகவலை உடைத்து வெளியிட்டிருந்தது. அதாவது கோட்டையின் முக்கிய அதிகாரிகள் சிலர் ‘அடுத்த ஆட்சி தி.மு.க.தான்’என முடிவெடுத்துவிட்டதோடு, செனடாப் சாலை வீட்டுக்கு தங்கள் தூதுவர்களை அனுப்பி விசுவாசத்தை காட்டியிருப்பதோடு, கோட்டைக்குள் நடக்கும் முக்கிய மூவ்களை அங்கே போட்டும் கொடுக்கிறார்கள்! என்று.
அந்த வகையில்தான் ஸ்டாலின் இந்த தகவலை ஸ்மெல் செய்தார். இதையடுத்து முக்கிய நிர்வாகிகள் அடங்கிய ஒரு சின்ன ஆலோசனை கூட்டத்தையும் ஸ்டாலின் போட்டார். இதன் பின் மா.சுப்பிரமணியன் கோட்டையின் மிக முக்கிய அதிகாரிகள் சிலரை தொடர்பு கொண்டும், சந்தித்தும் ‘இந்த திடீர் தோண்டல்கள்’ குறித்து கேட்டாராம்! ’எங்க மனசுக்கு அறிஞ்சு நாங்க எந்த முறைகேடும், ஊழலும் பண்ணலை. இவங்களா ஏதாச்சும் ஜோடிச்சு வெச்சிடுவாங்களா?’ என்று ரொம்ப்ப்ப்ப நல்லவராக ஒரு பிட்டு போட்டாராம்.

அதற்கு களுக்கென சிரித்துவிட்ட அதிகாரிகள் “நீங்க முறைகேடு பண்ணுனீங்களா இல்லையான்னு எங்களாக தெளிவா சொல்ல முடியும். ஆனா நாங்க அதுக்குள்ளே வர்ல.
ஆனா ஒண்ணு மட்டும் சொல்றோம், ஜெயலலிதா அம்மாவாலேயே துல்லியமா எந்த ஊழல் குற்றச்சாட்டையும் உங்க தளபதி மேலே சொல்ல முடியலை, ஆதாரம் காட்ட முடியலை, ஆதாரத்தை உருவாக்க கூட முடியலை. அவங்களாலே முடியாதது எப்படி இவங்களால்? நீங்க பயப்படுற மாதிரி ஜோடிச்சாலுமே கூட அது நீதிமன்றத்தில் நிற்காதே!
அவ்வளவு ஷார்ப்பான ஜெயலலிதாம்மாவாலேயே உள்ளாட்சி மற்றும் சென்னை மாநகராட்சி விஷயங்கள்ள தி.மு.க.வால் உருவாக்கப்பட்ட அல்லது பட்டதாக எந்த ஊழல் பூதத்தையும் வெளியே கெளப்பிக் கொண்டு வர முடியலையே? அதனால் இவங்களை நினைச்சு பயம் வேண்டாம். நீங்கள் உண்மையிலேயே தப்பு பண்ணியிருக்கலேன்னா ஏன் கலங்குறீங்க?” என்று தெளியவெச்சு தெளியவெச்சு மீண்டும் அடிச்ச மாதிரி கேட்டார்களாம்.

மா.சு. இதை அப்படியே ஸ்டாலினிடம் ஒப்புவிக்க, “அதிகாரிங்களுக்கு இந்த ஆட்சியில ஓவராதான் வாய் வந்துபோச்சு!” என்று சிரித்தாராம்.
ஆக கோட்டையின் உயர் அதிகாரிகளின் கணிப்பு இப்படியிருக்க, எடப்பாடியார் உத்தரவின் பேரில் ஜெயக்குமார் டீம் எதைத்தான் உட்கார்ந்து உட்கார்ந்து தேடுகிறதோ புரியவில்லை!?
அங்க என்னங்க சத்தம்?...
